Published:Updated:

காஸ் அடுப்புக்கு மாற்றாக சூரிய ஒளியில் இயங்கும் அடுப்பு - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்

சூரிய மின்கல அடுப்பு
News
சூரிய மின்கல அடுப்பு

ஒருமுறை இந்த அடுப்பில் முதலீடு செய்தால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எந்தவிதப் பராமரிப்பு செலவும் இருக்காது. அடுப்பில் பொருத்தப்படும் சூரிய மின் தகடுகளும் 25 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும்.

Published:Updated:

காஸ் அடுப்புக்கு மாற்றாக சூரிய ஒளியில் இயங்கும் அடுப்பு - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்

ஒருமுறை இந்த அடுப்பில் முதலீடு செய்தால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எந்தவிதப் பராமரிப்பு செலவும் இருக்காது. அடுப்பில் பொருத்தப்படும் சூரிய மின் தகடுகளும் 25 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும்.

சூரிய மின்கல அடுப்பு
News
சூரிய மின்கல அடுப்பு

வீட்டு சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், சூரிய ஒளியின் மூலம் இயங்கும் அடுப்பை உருவாக்கியுள்ளது. இந்த அடுப்பின் செயல்திறனை பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த வாரம் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய ஒளி அடுப்பு பற்றிய தகவல்களைப் பகிர்ந்தார். அதில், ``புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட இந்த அடுப்புக்கு, Surya Nutan' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அடுப்பின் விலை ரூபாய் 18,000 முதல், ரூபாய் 30,000 வரை இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், உற்பத்தி அதிகரித்தால் அடுப்பின் விலையும் குறைந்து ரூபாய் 12,000-க்கு விற்பனை செய்யும் நிலை வரலாம்.

மக்கள் இந்த அடுப்புக்கு கொடுக்கும் வரவேற்பைப் பொறுத்தே அடுப்பின் விலை குறித்த ஏற்ற இறக்கங்களைத் தீர்மானிக்க முடியும். ஒரு முறை இந்த அடுப்பில் முதலீடு செய்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எந்தவிதப் பராமரிப்பு செலவும் இருக்காது. அடுப்பில் பொருத்தப்படும் சூரிய மின் தகடுகளும், 25 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும்.

மேலும், சூரிய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் தெர்மல் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இரவு நேரத்திலும் இதை உபயோகிக்கலாம். தேவைப்படுவோர் மின்சார பயன்பாட்டிலும் இயக்கிக் கொள்ளலாம்.

சூரிய மின்கல அடுப்பு
சூரிய மின்கல அடுப்பு

மக்களிடம் விற்பனைக்கு அனுப்பும் முன்பாக, லடாக் உட்பட சூரிய வெப்பம் குறைந்த 60 இடங்களில் இந்த அடுப்பை சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். சோதனை நிச்சயம் வெற்றி பெறும். அடுத்த மூன்று மாதங்களில் இந்த சூரிய அடுப்பு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.