Published:Updated:

"அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன ஆகப்போகிறதோ!?" - காலநிலை மாற்றத்தால் அச்சத்தில் ஐ.டி நிறுவனங்கள்

ஐ.டி.நிறுவனங்கள்
News
ஐ.டி.நிறுவனங்கள் ( Pixabay )

காலநிலை மாற்றம் உலகளவில் பல பெருநிறுவனங்கள் தொழில் செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

Published:Updated:

"அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன ஆகப்போகிறதோ!?" - காலநிலை மாற்றத்தால் அச்சத்தில் ஐ.டி நிறுவனங்கள்

காலநிலை மாற்றம் உலகளவில் பல பெருநிறுவனங்கள் தொழில் செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஐ.டி.நிறுவனங்கள்
News
ஐ.டி.நிறுவனங்கள் ( Pixabay )

அதிகரித்துவரும் காலநிலை மாற்றப் பிரச்னைகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொழில்துறையில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் என்று கணிக்கப்படுகிறது. இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் உட்பட 16 இந்திய நிறுவனங்கள் காலநிலை மாற்றத்தை நினைத்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
Pixabay

கார்பன் டிஸ்க்லோஷர் புராஜெக்ட் என்ற உலகளாவிய அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கைபடி உலகளவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் காலநிலை மாற்றம் பல பாதிப்புகளை உண்டாக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதிகமாகப் பாதிக்கப்படப்போகும் 200 நிறுவனங்கள் அடங்கிய அந்தப் பட்டியலில் வங்கித்துறை, சிமென்ட் உற்பத்தி, ஐ.டி, வாகனங்கள், மின்சாரத்துறை, சுரங்கம், எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற 16 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் தண்ணீர் பற்றாக்குறைதான் அவர்கள் சந்திக்கப்போகும் மிகப்பெரிய ஆபத்தாக இருக்குமென்று கணிக்கப்படுகிறது.

காலநிலை மாற்ற விளைவுகள் அதிகரித்துக்கொண்டே வருவது, தொழில் செய்வதில் இருக்கும் அபாயங்களையும் அதிகப்படுத்துகிறது. உலகப் பொருளாதாரச் சந்தையில் 17 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குப் பங்கு வகிக்கும் பெருநிறுவனங்கள் இந்த அச்சத்திலிருந்து தப்பப்போவதில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவை அதன் விளைவை அனுபவிக்கப் போகிறார்கள்.
ஆய்வறிக்கை
தொழில்துறை
தொழில்துறை
Pixabay
அதில் இடம் பெற்றிருக்கும் இந்திய நிறுவனங்கள்: இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், கெயில், ஆக்சிஸ் வங்கி, கொடாக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் ஸிங்க் (Hindustan Zinc), இந்தியன் ஹோட்டல்ஸ், ஶ்ரீ சிமென்ட், டாடா கெமிக்கல்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா குளோபல் பிவெரேஜஸ், டாடா பவர் கார்ப்பரேஷன், விப்ரோ, அர்விந்த் லிமிடெட் என்ற ஜவுளி நிறுவனம்.

இவற்றில், இன்ஃபோசிஸ் மற்றும் டி.சி.எஸ் இந்தப் பிரச்னைகளைச் சமாளித்து எப்படித் தொழில் செய்யப்போகிறோமோ, அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்னவெல்லாம் ஆகப்போகிறதோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.