Published:Updated:

பிடிஎஸ் பாடகரை போல் மாற விரும்பிய நடிகர் - அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சோகம்!

செயிண்ட் வான் - பிடிஎஸ் ஜிமின்

தென்கொரியாவின் பிடிஎஸ் பாடகர் ஜிமினை போல் முக அமைப்பை பெற விரும்பிய கனடாவை சேர்ந்த நடிகர் ஒருவர் தொடர் அறுவை சிகிச்சையால் உயிரிழந்துள்ளார்.

Published:Updated:

பிடிஎஸ் பாடகரை போல் மாற விரும்பிய நடிகர் - அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சோகம்!

தென்கொரியாவின் பிடிஎஸ் பாடகர் ஜிமினை போல் முக அமைப்பை பெற விரும்பிய கனடாவை சேர்ந்த நடிகர் ஒருவர் தொடர் அறுவை சிகிச்சையால் உயிரிழந்துள்ளார்.

செயிண்ட் வான் - பிடிஎஸ் ஜிமின்

தென் கொரியாவைச் சேர்ந்த பாப் இசைக்குழு BTS. உலகம் முழுவதும் இவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஏழு பேர் கொண்ட இந்தக் குழு பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்னைகளை மையமாகக் கொண்டு பாடல்களை வெளியிடுவார்கள்.

இவர்களின் பாடல் வரிகள் சமூகவலைதளங்களில் மிக பிரபலம். இவர்களின் படைப்புகள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தக் குழு உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் பாடல்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

BTS
BTS
Jordan Strauss

இந்நிலையில் இந்தக் குழுவைச் சேர்ந்த பாடகரான ஜிமினை போல தோற்றமளிக்க விரும்பிய கனடாவை சேர்ந்த நடிகர் செயின்ட் வான், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். அதனால் ஏற்பட்ட விளைவுகளால் தற்போது உயிரிழந்துள்ளார்.

22 வயதான செயின்ட் வான், கனடாவில் பிறந்து, தன் இசைத்துறை மற்றும் தொழிலுக்காக தென்கொரியாவுக்கு குடிபெயர்ந்தார். கடந்தாண்டு, தன் முகத்தை மாற்றுவதற்காக இவர் 12 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். இதில் மூக்கை அழகாக்குதல், முகம், புருவம், கண்களை உயர்த்ததல், உதடு குறைப்பு ஆகியன அடங்கும். இதற்காக அவர் 2,20,000 டாலர் செலவிட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ. 1.80 கோடி.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, தாடை வடிவமைப்பை மாற்ற இவருக்குப் புதிதாக ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, ஊசி போட வேண்டியிருந்தது. நோய்த்தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவமனையிலேயே செயின்ட் உயிரிழந்தார்.

செயின்ட் வானின் உயிரிழப்பைப் பற்றி பேசியுள்ள அவரது விளம்பரதாரர் எரிக் பிளேக், `இது மிகவும் சோகமானது மற்றும் துரதிஷ்டவசமானது. செயின்ட் தனது தோற்றத்தில் மிகவும் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருந்தார்.

அவருக்கு சதுரமான தாடை மற்றும் கன்னம் இருந்தது. அது மிகவும் அகலமானதான இருப்பதாக நினைத்து தன் முக அமைப்புப் பிடிக்காமல் இருந்தார் செயின்ட். மேலும் பல நடிகர்களை போலவே தானும் `வி’ வடிவிலான முக அமைப்பை பெற விரும்பினார். அவர் தென்கொரியாவுக்கு வந்த பிறகு இங்கு அவருக்கு வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. அவர் தனது மேற்கத்திய தோற்றத்துக்கு எதிராக மிகவும் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக உணர்ந்தார். இதனையடுத்து செயின்ட் மிகக் கடினமாக உழைத்தார், மிகவும் உற்சாகமாக இருந்தார்.

செயின்ட் வானின் பழைய முக தோற்றம்
செயின்ட் வானின் பழைய முக தோற்றம்

2019-ல் ஒரு தென்கொரியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அவருடன் ஒப்பந்தம் செய்து செயின்டின் வீடு, போக்குவரத்து மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் செய்து வந்தது. யு.எஸ் ஸ்ட்ரீமிங் நெட்வொர்க்கிற்காக பிடிஎஸ் பாடகர் ஜினினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்து அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டபோதுதான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

செயின்ட் வான் கடந்த வருடம் ஜூன் மாதம் கொரிய நாடகமான ‘பிரட்டி லைஸின்’ படப்பிடிப்பை தொடங்கி டிசம்பரில் முடித்தார். எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபரில் வெளியாகவுள்ளது. ஆனால் அதற்குள் அவருக்கு இந்த நிலை உருவாகிவிட்டது" என, எரிக் வேதனை தெரிவித்துள்ளார்.