Published:Updated:

How To: அழுக்கான சுவரை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean A Dirty Wall?

Cleaning ( Pixabay )

குழந்தைகள் இருக்கும் வீட்டில் சுவர்கள் எளிதில் அழுக்கடையும் வாய்ப்புகள் உண்டு. அழுக்கான சுவரை சுத்தம் செய்வதற்கான ஆலோசனைகள் இங்கே...

Published:Updated:

How To: அழுக்கான சுவரை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean A Dirty Wall?

குழந்தைகள் இருக்கும் வீட்டில் சுவர்கள் எளிதில் அழுக்கடையும் வாய்ப்புகள் உண்டு. அழுக்கான சுவரை சுத்தம் செய்வதற்கான ஆலோசனைகள் இங்கே...

Cleaning ( Pixabay )

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் குறும்புகளுக்கும், கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது. அதே நேரம், அவர்களால் வீடு ஒருவழி ஆவதையும் தடுக்க முடியாது. குறிப்பாக, சுவர்கள். கையில் கிடைப்பதை எல்லாம் வைத்து சுவரில் கிறுக்குவார்கள். விளையாடும் போது சுவர்களில் அழுக்குக் கைகளைப் பதிப்பார்கள். சுவரில் அ, ஆ, எண்கள், ஓவியங்கள் என்று எழுதுவதிலும், வரைவதிலும் அவர்களுக்கு அலாதி இன்பம். மேலும், தூசு, எண்ணெய்ப் பிசுக்கு என்றும் வீட்டுச் சுவர்கள் அழுக்காவது உண்டு.

அழகான வீட்டின் அழுக்கான சுவரை எளிதாகச் சுத்தம் செய்வதற்கான வழிமுறைகள் இங்கே...

Cleaning and disinfectant
Cleaning and disinfectant

தேவையான பொருள்கள்

* மென்மையான ஸ்பான்ஞ்

* வாஷிங் திரவம்

* மைக்ரோஃபைபர் தரை துடைப்பான் (அல்லது மைக்ரோஃபைபர் துணி)

* உலர்ந்த துணி

* இரண்டு பாத்திரங்கள்

* வெதுவெதுப்பான தண்ணீர்

முதலில் சுவரில் உள்ள ஃபோட்டோ பிரேம்கள், மற்ற பொருள்களை எடுத்துவிடவும். பின்பு சுவரை எந்த தூசும் இல்லாதபடி உலர்ந்த துணியைக் கொண்டு துடைத்து எடுத்துக் கொள்ளவும். பின் மைக்ரோஃபைபர் துணியைக் கொண்டு சுத்தம் செய்யவும்.

kitchen
kitchen

எண்ணெய்ப் பிசுபிசுப்பு இல்லாத சுவராக இருந்தால், வெதுவெதுப்பான நீரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் வாஷிங் திரவத்தை கொஞ்சம் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின்னர், மென்மையான ஸ்பாஞ்சை எடுத்து இந்த கலவையில் நனைத்து, சுவரில் அழுத்தமாக இல்லாமல் மென்மையாக கீழிருந்து மேல்நோக்கி துடைக்கவும். கீழிருந்து மேல்நோக்கித் துடைக்கும்போது, நீர் ஒழுகுதல், அதனால் ஏற்படும் கறைகள் ஏற்படாமல் இருக்கும். தேவைப்பட்டால், ஸ்பாஞ்சை நன்றாகக் கழுவி, இதுபோல் இன்னொரு முறை துடைக்கவும். அதிகமான சோப்பு திரவத்தை தண்ணீரில் கலக்க வேண்டாம்; பெயின்ட் சிதைவுறும்.

எண்ணெய்ப் பிசுபிசுப்பு உள்ள சுவர் என்றால், ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் வினிகர் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். அந்தக் கலவையை மென்மையான துணி அல்லது ஸ்பான்ஞ் கொண்டு எடுத்து பிசுபிசுப்பான சுவரில் தேய்த்து எடுக்கவும்.

சில நிமிடங்களுக்கு பொறுமையாக தேய்க்கும் போது பிசுபிசுப்பு போய்விடும். பின்பு வெறும் தண்ணீர் கொண்டு துடைத்து எடுத்தால், சுவர் பளிச்சென இருக்கும்.

cleaning
cleaning

குறிப்புகள்...

* கறைகளை அவ்வப்போது சுத்தம் செய்யவும். கைரேகைகள், லேசான கறைகளைக் கண்டால் உடனடியாகத் துடைத்து எடுக்கவும்.

* சில நேரங்களில் சுத்தம் செய்வது மட்டும் போதாது. பெயின்ட்-க்கு டச் அப் தேவை. வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பெயின்ட் நிறங்களின் சிறிய மாதிரிகளை வைத்திருந்து, தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.

* காற்று சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்ற மின்விசிறிகளை இயக்கவும். இது காற்றில் பரவும் தூசி மற்றும் கிரீஸை குறைவாக வைத்திருக்க உதவும். சுவர்கள் மற்றும் பிற பரப்புகளில் தூசு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறையும்.