Published:Updated:

`பற்றியெரியும் வீடு!’ – கிரேட்டா தன்பர்க், குடும்பத்தினர் எழுதிய புத்தகம் பேசும் உண்மைகள்!

கிரேட்டா தன்பர்க்
News
கிரேட்டா தன்பர்க்

கிரேட்டா தனது அம்மாவிடம், “அம்மா நான் குணமடைந்துவிடுவேனா?” எனக் கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று யோசிக்கிறாள் மலேனா. அங்குதான் கிரேட்டா மற்றும் குடும்பத்தின் காலநிலைக்கான பயணம் தொடங்குகிறது.

Published:Updated:

`பற்றியெரியும் வீடு!’ – கிரேட்டா தன்பர்க், குடும்பத்தினர் எழுதிய புத்தகம் பேசும் உண்மைகள்!

கிரேட்டா தனது அம்மாவிடம், “அம்மா நான் குணமடைந்துவிடுவேனா?” எனக் கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று யோசிக்கிறாள் மலேனா. அங்குதான் கிரேட்டா மற்றும் குடும்பத்தின் காலநிலைக்கான பயணம் தொடங்குகிறது.

கிரேட்டா தன்பர்க்
News
கிரேட்டா தன்பர்க்

செப்டம்பர் 2019-ல் சுவிட்சர்லாந்து நாட்டில் தாவோஸ் நகரத்தில் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் சர்வதேச மாநாடு நிகழ்ந்தது. லேப்டாப்கள், ஐபேட்கள் டேட்டாக்கள் எங்கு திரும்பினாலும் டிப்டாப் ஃபார்மல் உடை அறிவுஜீவிகளுக்கும் புள்ளிவிவரப் புலிகளுக்கும் நடுவே கசங்கிய தாளைக் கையில் ஏந்தியபடி16 வயதுச் சிறுமி கிரேட்டா தன்பெர்க் ‘How dare you?’ எனக் கேள்வி எழுப்பினாள்.

``சுற்றுச்சூழலைச் சூன்யமாக்கி எங்கள் எதிர்காலத்தை இருட்டடிப்பு செய்துவிட்டு இங்கே பொருளாதாரப் புள்ளிவிவரங்களைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தைரியம். எதிர்காலத்துக்காக எங்கள் மீது நம்பிக்கை வைக்க உங்களுக்கு என்ன துணிச்சல்" என உலக நாடுகளின் தலைவர்களை அவள் கேள்வி எழுப்பினாள்.

World economic forum davos
World economic forum davos
வீட்டில் சார்ட் பேப்பர் அட்டைகள் கொண்டு ’ skolstrejk for klimatet ’ எனத் தயாரித்த பதாகையை ஏந்தியபடி தனது பர்ப்பிள் நிற ஸ்கூல் பையுடன் பள்ளிக்குச் செல்லாமல் நாடாளுமன்ற வாசலில் அவளை அமரவைத்தது எது?

கிரேட்டாவின் இந்தப் பயணம் அதற்குச் சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு 2018-ல் ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்ற வாயிலில் தொடங்கியிருந்தது. காலநிலைமாற்றத்துக்கு எதிரான பள்ளித்துறப்புப் போராட்டத்தை அவள் தொடங்கியிருந்தாள். கிரேட்டா ஏன் ஸ்வீடன் நாட்டுப் பாராளுமன்றத்தின் வாசலில் அமர்ந்து போராடவேண்டும், வீட்டில் சார்ட் பேப்பர் அட்டைகள் கொண்டு ’ skolstrejk for klimatet ’ எனத் தயாரித்த பதாகையை ஏந்தியபடி தனது பர்ப்பிள் நிற ஸ்கூல் பையுடன் பள்ளிக்குச் செல்லாமல் நாடாளுமன்ற வாசலில் அவளை அமரவைத்தது எது? காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலக நாடுகள் மௌனமாக இருக்க ஒற்றைச் சிறுமியாக அவள் குரல்கொடுக்கக் காரணம் என்ன? ஆகஸ்ட் 2018-ல் அவள் பாராளுமன்ற வாயிலில் அமர்வதற்கு முன்பு என்ன நடந்தது? இதுபற்றியெல்லாம் பேசுகிறது “Our house is on fire – Scenes of A family and a planet in crisis” புத்தகம்.

Our house is on fire – Scenes of A family and a planet in crisis
Our house is on fire – Scenes of A family and a planet in crisis

கிரேட்டா, கிரேட்டாவின் தங்கை பிரேட்டா, கிரேட்டாவின் தாய் மலேனா மற்றும் தந்தை ஸ்வண்ட் ஆகிய நால்வரும் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். கிரேட்டாவின் தாய் மலேனா விவரிப்பதுபோலத் தொடங்குகிறது புத்தகம். கொஞ்சம் சிதறியிருந்தால் சுயசரிதைபோல மாறியிருக்கக் கூடிய புத்தகத்தை அதன் கருவின் அவசியம் உணர்ந்து, மனதுக்குப்பட்ட உண்மையைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். மலேனா ஸ்வீடன் நாட்டின் பிரபல ஒபேரா பாடகர். ஸ்வண்ட் பிரபல நாடக நடிகர். இருவருக்கும் 2003-ல் பிறக்கிறாள் கிரேட்டா. அதற்கு அடுத்த மூன்று வருடங்களில் பிரேட்டா பிறக்கிறாள். இவர்களைத் தவிர, மோசஸ் மற்றும் ராக்ஸி என இரண்டு பெட் நாய்கள் இந்த ஆறுபேர் கொண்ட அமைதியான புரிந்துணர்வுடைய குடும்பம்.

மலேனா மற்றும் ஸ்வண்ட் இருவருடைய பணிகளில் சில விரிசல்கள் இருந்தபோதும்கூட ஒற்றுமையாக இருக்கும் அந்தக் குடும்பத்தில் கிரேட்டாவிடம் ஏற்படும் திடீர் மாற்றம் சிக்கல்களை உண்டுபண்ணுகிறது. 2011-ல் திடீரென ஒருநாள் தான் பியானோ வாசிப்பதையே நிறுத்திவிடுகிறாள் கிரேட்டா. அதற்கடுத்து படிப்படியாக அவளது செயல்பாடுகளைச் சுருக்கிக்கொள்கிறாள். இறுதியாக ஒருநாள் சாப்பிடுவதையும் நிறுத்திக்கொள்கிறாள்.

Svant thunberg and family
Svant thunberg and family

அவளுக்குக் கவனக்குறைவு இருப்பதாக அவளது பள்ளிக்கூடம் அவளை ஒதுக்குகிறது. அதற்கடுத்து பல மருத்துவப்பரிசோதனைகள் அவளுக்கு நடக்கின்றன. இறுதியாக அவளுக்கு ஆஸ்பெர்ஜர்ஸ் சிண்ட்ரோம், செலக்டிவ் ம்யூட்டிசம், ஓசிடி உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவளுக்கு இந்த நோய்ச்சிக்கல்கள் கண்டறியப்பட்ட சில வருடங்களிலேயே பிரெட்டாவுக்கும் அதுபோன்றதொரு டிஸ்ஆர்டர் இருப்பதாகக் கண்டறியப்படுகிறது. இப்படியானதொரு சூழலில் திடீரென ஒருநாள் கிரேட்டா தனது அம்மாவிடம், “அம்மா நான் குணமடைந்துவிடுவேனா?” எனக் கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று யோசிக்கிறாள் மலேனா. அங்குதான் கிரேட்டா மற்றும் குடும்பத்தின் காலநிலைக்கான பயணம் தொடங்குகிறது.

1960 களில் சில பெண்ணிய அமைப்புகள் “The personal is political” என்கிற அரசியல் சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கியிருந்தன. நம் வாழ்வின் ஒவ்வோர் அசைவுகளிலும் அரசியல் கலந்திருக்கிறது என்பதற்கான விழிப்புணர்வு அந்த வாசகம். இதை 279 பக்கங்களில் பேசியிருக்கிறது இந்த நால்வர் அணி. புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும் ‘Scene’ எனக் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு சீனிலும் இடம்பெறும் சில வரிகள் ‘How dare you?’ வைவிடப் பன்மடங்கு வீரியத்தைக் கொண்டிருக்கின்றன. சலுகைகளுக்குப் பழக்கப்பட்டவர்களுக்குச் சம உரிமை என்பது ஒடுக்குமுறைதான் என்கிற வரி இன்னும் கண்களைவிட்டு அகல மறுக்கிறது.

காலநிலை மாற்றத்துக்கு எதிரான குரல்கள் அத்தனையும் வெறும் அரசியல் ஆட்டங்களாகவே சுருங்கிவிடுகின்றன. அந்த ஆட்டத்தில் சொற்கள்தான் காய்கள். எந்தச் சொல்லுக்கு அதிக வலிமை இருக்கிறதோ அந்தச் சொல் வெற்றிபெறுகிறது என விமர்சிக்கிறது இந்தப் புத்தகம். தனியொரு சிறுமி எடுத்திருக்கும் இந்தப் போராட்டத்தில் அவளுக்கு எதிரான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் அவள் எப்படி எடுத்துக்கொள்கிறாள் எனப் பேசுகிறார் மலேனா.

ஆஸ்பெர்ஜர்ஸ் சிண்ட்ரோம் இருக்கும் சிறுவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார்கள். தாங்கள் கவனம்செலுத்த விருப்பப்படுவதில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டே இருப்பார்கள்.

எங்கள் வீடு பற்றியெரிந்தது நாங்கள் இதைச் செய்தோம், உலகம் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் Our house is on fire எழுப்பும் கேள்வி.
greta and malena
greta and malena

அதைத்தான் கிரேட்டாவும் செய்கிறாள் என மலேனா குறிப்பிடும்போது ஒரு பாதிப்பைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் அவளது மன திடம் நம்மை உலுக்கிவிடுகிறது. கிரேட்டா வெறும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஒரு அடையாளமாக மட்டும் இந்தப் புத்தகம் முன்னிறுத்தவில்லை. அவளைப் போன்ற பல பிள்ளைகளுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக இந்தப் புத்தகம் இருக்கிறது. எங்கள் வீடு பற்றியெரிந்தது நாங்கள் இதைச் செய்தோம், உலகம் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் Our house is on fire எழுப்பும் கேள்வி. புத்தகத்திலேயே அதற்கான பதிலும் இருக்கிறது, “ஒருவேளை எங்களது இந்த நிலை மாறாமலே கூடப் போகலாம். ஆனால் சிறிது சிறிதாக நாங்கள் மீள முடியும். அதுதான் வலிமை. அதுதான் ஒளி….”

We try. We heal each other. Perhaps we will never be fine but we can always get a little bit better, and there is strength in that. There is hope in that.
Our House is on fire: Scene 23