Published:Updated:

மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மந்திர கிணறு... இன்றுவரை 300 வீடுகளுக்கு நீர் வழங்கும் அதிசயம்!

மந்திர கிணறு

இந்தப் பகுதியில் வாழும் 300 குடும்பங்களுக்கு இந்தக் கிணற்றில் இருந்து ஏற்படுத்தப்பட்ட இணைப்பு வழியாக நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு மக்கள் குடிநீர் வரி செலுத்துவதில்லை.

மழைக்காலத்தில் அதிகப்படியான தண்ணீர் இருக்கும் கிணறுகள் பலவும், வெயில் காலத்தில் வற்றிவிடும். கிணற்றில் உள்ள தண்ணீரை நம்பி இருந்த மக்களுக்கு, இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். ஆனால், மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கிணறு, இன்றும் பல மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

கோட்டயம்
கோட்டயம்

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் இந்தக் கிணறு அமைந்துள்ளது. அங்குள்ள கிராம மக்கள் அனைவருக்கும் அள்ள அள்ளக் குறையாத தண்ணீர் அளித்து வருவதால், இந்தக் கிணற்றை, `மந்திர கிணறு’ என அழைக்கின்றனர். ஆனால், இக்கிணற்றின் உண்மையான பெயர், `கமலா நீர்ஜி.'

500 வருடங்களுக்கு முன் தெக்குன்கூர் சமஸ்தான ஆட்சிக் காலத்தில் கமலா நீர்ஜி கிணறு கட்டப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை கிணற்றில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. 

இந்தப் பகுதியில் வாழும் 300 குடும்பங்களுக்கு இந்தக் கிணற்றில் இருந்து ஏற்படுத்தப்பட்ட இணைப்பு வழியாக நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு மக்கள் குடிநீர் வரி செலுத்துவதில்லை.

அப்பகுதியில் உள்ள வார்டு குழுவினர், கிணற்றின் பராமரிப்புக்கு `தங்கம்மா' என்ற மூதாட்டியை நியமித்துள்ளனர்.

குடும்பங்களுக்குத் தண்ணீர் விநியோகிக்கும் பொறுப்பை இவர் கவனித்து வருகிறார். காலை 6.30 மணிக்கெல்லாம் கிணற்றில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடுவார். வார்டில் இருந்து சுற்றி உள்ள 3 கிலோமீட்டர் வரை கிணற்றில் இருந்து நீர் செல்கிறது.

தண்ணீர்
தண்ணீர்

தினசரி தேவைக்கு மக்கள் இந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்தி வருகின்றனர். மாதம்தோறும் ஒவ்வொரு குடும்பத்தினரும் இதற்காக தங்கம்மாவுக்கு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வருகின்றனர். தற்போது இந்தப் பெரிய கிணற்றை கோட்டயம் மாநகராட்சி நிர்வகித்து வருகிறது.  

மக்களின் தண்ணீர் தேவையை தீர்த்து வரும் இந்தக் கிணறு, உண்மையில் ஒரு `மந்திர கிணறு' எனப் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்!