Published:Updated:

பசுமைப் பொருளாதாரம், மாற்று எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்த திட்டம்... வெளியிட்டது தமிழக அரசு!

பசுமைப் பொருளாதாரத் திட்டம்

``சர்க்கரை ஆலைகளின் செயல்திறனில் மறுமலர்ச்சி எற்பட்டு இதனால் சர்க்கரை ஆலைகளின் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே, விவசாயிகளுக்கு தரப்பட வேண்டிய விளைபொருள் கொள்முதலுக்கான நிலுவைத் தொகை தாமதமின்றி, வழங்கிட இயலும்."

Published:Updated:

பசுமைப் பொருளாதாரம், மாற்று எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்த திட்டம்... வெளியிட்டது தமிழக அரசு!

``சர்க்கரை ஆலைகளின் செயல்திறனில் மறுமலர்ச்சி எற்பட்டு இதனால் சர்க்கரை ஆலைகளின் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே, விவசாயிகளுக்கு தரப்பட வேண்டிய விளைபொருள் கொள்முதலுக்கான நிலுவைத் தொகை தாமதமின்றி, வழங்கிட இயலும்."

பசுமைப் பொருளாதாரத் திட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கொள்கைகளை இன்று (18.03.2023)  தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

அதில் தமிழ்நாட்டை பசுமைப் பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்த, தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023, தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023 ஆகிய இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளார்.

தமிழக அரசு - தலைமைச் செயலகம்
தமிழக அரசு - தலைமைச் செயலகம்

``எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் வாகனங்கள் வெளியேற்றும் புகை உமிழ்வு வெகுவாகக் குறையும் என்பதால் சுற்றுப்புற மாசுபாட்டின் நிலை பெருமளவு குறைந்து, மக்களின் சுகாதாரம் பேணப்படும் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலை மேம்படும். இம்முயற்சி, ஐக்கிய நாடுகள் சபையின் COP 26-ல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய புகை உமிழ்வு இலக்கை அடைவோம் என்று இந்தியா அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தமிழ்நாட்டின் முக்கிய பங்களிப்பாக இக்கொள்கை அமையும்” என்று தெரிவித்துள்ளனர்.

எத்தனால் கலந்த பெட்ரோலை ஊக்குவிப்பதற்கான காரணிகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உபரி பருவத்தில், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனில் மறுமலர்ச்சி எற்பட்டு இதனால் சர்க்கரை ஆலைகளின் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கரும்பு வயல்
கரும்பு வயல்

எனவே, விவசாயிகளுக்கு தரப்பட வேண்டிய விளைபொருள் கொள்முதலுக்கான நிலுவைத் தொகை தாமதமின்றி, வழங்கிட இயலும். கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற மூலப்பொருள்களை பயிரிடும் விவசாயிகளின் வருமானம் பெருமளவு அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

வடிப்பாலை கரையக்கூடிய ஈரதானிய பொருள்கள் (DWGS) மற்றும் வடிப்பாலை கரையக்கூடிய உலர் தானிய பொருள்கள் (DDGS) ஆகியன கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும், எரிபொருள் இறக்குமதியில் வெளிநாடுகளை சார்ந்து இருத்தல் குறையும் என்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். இக்கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023

சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமையான எரிபொருளான இயற்கை எரிவாயுவின் உபயோகத்தை ஊக்கப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பை தமிழ்நாட்டில் விரைவாக அமைக்கத் தேவையான விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கும் நோக்கத்தோடு இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வாகன தொழிற்சாலைகளுக்கும், பயன்பாட்டுக்கும், 2.30 கோடி வீடுகளுக்கும் குழாயின் மூலம் இயற்கை எரிவாயு வழங்க இக்கொள்கை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் சுமார் 35,000 கோடி ரூபாய் முதலீடு 8 ஆண்டுகள் கால அளவில் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கொள்கையின் நோக்கம்...

நகர எரிவாயு விநியோகத்துக்கான உட்கட்டமைப்பை விரைவாகச் செயல்படுத்துவதை உறுதி செய்தல், விரைவான அனுமதிகளை வழங்குதல், இயற்கை எரிவாயு பயன்பாட்டைப் படிப்படியாக ஊக்குவிக்க தேவையான விதிகள்/ ஒழுங்குமுறைகளை உருவாக்குதல், பாதுகாப்பான மற்றும் தடையில்லா இயற்கை எரிவாயுவை விநியோகிக்கத் தேவையான உட்கட்டமைப்பை நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் பராமரிக்க வலியுறுத்துதல், மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் திரவ இயற்கை எரிவாயுவை எரிபொருளாக ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தல் ஆகியவை இக்கொள்கையின் நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் ம.பல்லவி பல்தேவ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.