Published:Updated:

5,000 திருமண அழைப்பிதழ்களில் பழமர விதைகள்! மாற்றியோசித்த ஊட்டி நபர்!

மர விதைகள் கொண்ட அழைப்பிதழ்

ஊட்டியைச் சேர்ந்த ஜார்ஜ், எளிதில் மட்கும் சணல் பைகளுக்குள் பழ மர விதைகளை வைத்து பசுமை அழைப்பிதழை உருவாக்கி அனைவருக்கும் வழங்கி வருகிறார். சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் இந்தப் பசுமை திருமண அழைப்பிதழ் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Published:Updated:

5,000 திருமண அழைப்பிதழ்களில் பழமர விதைகள்! மாற்றியோசித்த ஊட்டி நபர்!

ஊட்டியைச் சேர்ந்த ஜார்ஜ், எளிதில் மட்கும் சணல் பைகளுக்குள் பழ மர விதைகளை வைத்து பசுமை அழைப்பிதழை உருவாக்கி அனைவருக்கும் வழங்கி வருகிறார். சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் இந்தப் பசுமை திருமண அழைப்பிதழ் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மர விதைகள் கொண்ட அழைப்பிதழ்

இந்தப் பூமிக்கு பசுமை பங்களிப்பை அளிக்க அனைவரும் தன்னால் இயன்ற உதவியை செய்துகொண்டு வருகின்றனர். மரம் நட்டு, அதை வளர்த்து பராமரிப்பது ஒரு பக்கம், விதைகளாக விதைத்தால் அவை இயற்கையாக முளைத்து மரங்களின் எண்ணிக்கையை அதிரிக்கும். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் ஊட்டி நகர்மன்ற உறுப்பினராகவும் தி.மு.க-வின் நகர செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவரின் மகன் ரூபன் ஜார்ஜுக்கு வருகிற 30-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

மர விதைகள் கொண்ட அழைப்பிதழ்
மர விதைகள் கொண்ட அழைப்பிதழ்

சூழலியலை மேம்படுத்தும் வகையில் திருமண அழைப்பிதழை வடிவமைக்கத் திட்டமிட்ட ஜார்ஜ், எளிதில் மட்கும் சணல் பைகளுக்குள் பழ மர விதைகளை வைத்து பசுமை அழைப்பிதழை உருவாக்கி அனைவருக்கும் வழங்கி வருகிறார். சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் இந்தப் பசுமை திருமண அழைப்பிதழ் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த முன்னோடி முயற்சி குறித்து தெரிவித்த ஜார்ஜ், ``நீலகிரி போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் இந்த மலைக்கும் மக்களுக்கும் பயன்தரும் வகையில் திருமண அழைப்பிதழை ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன். எளிதில் மக்கி மண்ணுக்கு உரமாகும் சணல் பைகளுக்குள் பழ மரங்களின் விதைகள் வைக்கப்பட்ட பிரத்யேக திருமண அழைப்பிதழை உருவாக்கினோம்.

மர விதைகள் கொண்ட அழைப்பிதழ்
மர விதைகள் கொண்ட அழைப்பிதழ்

அழைப்பிதழை படித்துவிட்டு சணல் பையை மண்ணுக்குள் வைத்து பராமரித்தால் மரம் முளைக்கும். ஒவ்வொரு அழைப்பிதழுக்குள்ளும் 6 விதைகள் உள்ளன. 5,000 திருமண அழைப்பிதழை உருவாக்கினோம். இதன் மூலம் சுமார் 30,000 மரங்கள் வளரும் என நம்புகிறோம். நம்மால் முடிந்த இந்த சிறிய முயற்சி பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.