Published:Updated:

கூகுள் பே-யில் பணம் செலுத்தி ஸ்விக்கி, ஸொமேட்டோவில் மரக்கன்றுகளைப் பெறலாம்...

விவசாய நிலங்களில் வளரும் மரங்கள்

``பிறந்தநாள், திருமணநாள் விழாக்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக அளிக்க விரும்புவோர் பசுமை தமிழகம் திட்டத்தின் இணையதளம் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இதில் 60-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது" - வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு.

Published:Updated:

கூகுள் பே-யில் பணம் செலுத்தி ஸ்விக்கி, ஸொமேட்டோவில் மரக்கன்றுகளைப் பெறலாம்...

``பிறந்தநாள், திருமணநாள் விழாக்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக அளிக்க விரும்புவோர் பசுமை தமிழகம் திட்டத்தின் இணையதளம் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இதில் 60-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது" - வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு.

விவசாய நிலங்களில் வளரும் மரங்கள்

தேசிய வனக்கொள்கையின்படி, ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33%, அதாவது தமிழ்நாட்டில் 42,919 சதுர கி.மீ பரப்பளவில் பசுமை போர்வை இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தற்போது 31,194 சதுர கி.மீ பரப்பளவே பசுமை போர்வை உள்ளது.

தமிழ்நாடு எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ வேண்டும் என்ற நோக்கோடு பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக உயர்த்த இலக்கும் வைத்தது. இத்திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்குள் 260 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயம் செய்தது.

மரக்கன்று நடுதல் - சித்திரிப்பு படம்
மரக்கன்று நடுதல் - சித்திரிப்பு படம்

அதைச் செயல்படுத்தும் விதமாக இப்போது, ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்க  திட்டமிடப் பட்டுள்ளதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் நர்சரிகள் உதவியுடன் கடந்த ஆண்டு மட்டும் 2.80 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 7.50 கோடி மரக்கன்றுகள் நடும் இலக்குடன் பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில்,

``ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமை தமிழகம் திட்டத்துக்கு என மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிரீன் கமிட்டி அமைத்தோம். அதன்படி, இந்தக் குழுக்கள் மூலமாகப் புதிய மரக்கன்றுகளை நடுதல் தொடர்பான தகவல்கள் பெறப்படுகின்றன. கடந்த ஆண்டு, 350 நர்சரிகள் உருவாக்கப்பட்டன. நடப்பாண்டு 300 நர்சரிகளை உருவாக்க உள்ளோம். முதல் கட்டமாக காடுகளின் உள்ளே மரக்கன்றுகளின் பரப்பை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பளவை 33 சதவிகிதம் உயர்த்த பல வழிகளில் திட்டமிடப்பட்டு தொடர்ந்து செயல்படுகிறோம்.  

சுப்ரியா சாஹு
சுப்ரியா சாஹு

வீடுதேடி வரும் மரக்கன்றுகள்...

பிறந்தநாள், திருமணநாள் போன்ற விழாக்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக அளிக்க விரும்புவோர் பசுமை தமிழகம் திட்டத்தின் www.greentnmisson.com இணையதளம் மூலம் ஆர்டர் செய்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இதில் 60-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். பசுமை தமிழகம் திட்டத்தின் இணையதளம் வாயிலாக ஆர்டர் செய்யப்படும் மரக்கன்று விதைகள் அல்லது மரக்கன்றுகளை ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலமாகப் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.  மரக்கன்றுகளுக்கான பணத்தை பொது மக்கள் போன் பே, கூகுள் பே மற்றும் யு.பி.ஐ போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் செலுத்திக்கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.