Published:Updated:

புலிகள் எண்ணிக்கையை இருமடங்கு உயர்த்தி சாதனை; சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச விருது!

புலி
News
புலி

10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தும் நாட்டுக்கு `TX2' எனும் சர்வதேச விருது வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி `TX2' என்ற விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பெற்று சாதனை படைத்துள்ளது.

Published:Updated:

புலிகள் எண்ணிக்கையை இருமடங்கு உயர்த்தி சாதனை; சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச விருது!

10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தும் நாட்டுக்கு `TX2' எனும் சர்வதேச விருது வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி `TX2' என்ற விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பெற்று சாதனை படைத்துள்ளது.

புலி
News
புலி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வன விலங்குகள் சரணாலயம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. நீலகிரி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 1411.6 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகம் ஆகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

புலிகளை பாதுகாப்பது மற்றும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு `Conservation Assured | Tiger Standard' (CA|TS), `Fauna & Flora International', `Global Tiger Forum', `IUCN Integrated Tiger Habitat Conservation Programme', `Panthera', `UNDP Lion’s Share', `Wildlife Conservation Society' and WWF ஆகிய சர்வதேச அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்தக் கூட்டமைப்பு 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தும் நாட்டுக்கு `TX2' எனும் சர்வதேச விருது வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி சர்வதேச அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தியதற்காக `TX2' என்ற விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பெற்று சாதனை படைத்துள்ளது. அதாவது உலக அளவில் இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2-வது இடத்தை நேபாளம் நாட்டிலுள்ள பார்டியா தேசிய பூங்கா பெற்றுள்ளது.

அடர்ந்த காடு, நீரோடைகள், புலிகள் வாழ்வதற்கான தட்ப வெப்ப சூழல் போன்றவற்றால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதேபோல் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தையொட்டி முதுமலை, பந்திப்பூர், பி.ஆர்.ஹில்ஸ், ஈரோடு மற்றும் கோவை வனப்பிரிவு, மாதேஸ்வரன் மலை வனவிலங்குகள் சரணாலயம் உள்ளதால் புலிகள் எளிதாக பிற இடங்களுக்கு புலம் பெயர்ந்து இரை தேடியும் புதிய எல்லையில் வாழவும் முடிகிறது. இதனால் புலிகளின் எண்ணிக்கை தற்போது 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 30 புலிகளாக இருந்த காப்பகத்தில் தற்போது 80 புலிகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

புலி
புலி

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் கிருபா சங்கர் அவர்களிடம் பேசினோம். ``சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு `TX2' விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது என்பதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உலகளவில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. இது இந்திய நாட்டிற்கே பெருமையான விஷயம். நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டு புலிகளை பாதுகாத்து, அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்கின்ற கூடுதல் பொறுப்பை இந்த விருது கொடுத்திருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையையும், கிழக்குத் தொடர்ச்சி மலையையும் இணைக்கும் பாலமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இருக்கிறது. இங்கு பவானிசாகரில் ஆரம்பித்து கடம்பூர், கேர்மாளம், ஜீர்ஹள்ளி, ஆசனூர் மற்றும் பர்கூர் வனப்பகுதி வரை புலிகள் பரவாக இருக்கின்றன. புலிகளுக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லாமல், வனத்துறையின் பாதுகாப்பு முழுமையாக இருப்பதால் புலிகளின் இனப்பெருக்கம் நன்றாக இருக்கிறது. தொடர்ச்சியாக வேட்டைத் தடுப்பு காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடச் செய்திருப்பதோடு, புலிகள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விட மேம்பாட்டிற்காக வனத்தினுள் ஆங்காங்கே நீர்நிலைகள் உருவாக்கியுள்ளோம். மேலும், மலைவாழ் மக்களின் ஒத்துழைப்பிற்காகவும், விழிப்புணர்வுக்காகவும் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தி வருகிறோம்” என்றார்.