பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வமுடையவர். தன் வீட்டில் புறா, நாய், பூனை போன்ற விலங்குகளை வளர்த்து வருகிறார். இதனுடன் ``அலெக்ஸாண்டரின் கிளியையும்" வளர்த்து வந்தார். சமீபத்தில் அலெக்ஸாண்டரியன் கிளியுடன் இருக்கும் காணொளியை சமூக வலைதளங்களில் ரோபோ சங்கர் பதிவிட்டுள்ளார்.

காணொளியைப் பார்த்தவர்கள் வனத்துறைக்குப் புகாரளித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள், புகாரின் அடிப்படையில் நடிகர் ரோபோ சங்கரின் வீட்டிலிருந்து அலெக்சாண்டிரியன் கிளியை மீட்டுள்ளனர். கிளியை மீட்டதோடு அபராதமும் விதித்துள்ளது வனத்துறை. இந்த சம்பவத்திற்குப் பிறகு பறவை வளர்க்கும் ஆர்வமுடையவர்களுக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. வீட்டில் பறவைகள் வளர்க்கலாமா? வளர்ப்பதற்கு அனுமதி இருந்தால் என்னென்ன பறவைகள் வளர்க்கலாம்? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
வீட்டில் வளர்க்கக் கூடாத பறவைகளின் பட்டியல்...
இது தொடர்பாக வனத்துறை அதிகாரியிடம் பேசியபோது, ``லவ் பேர்ட்ஸ் (love birds) வகை பறவையைச் செல்லப்பிராணி என்ற அடிப்படையிலும், வெளிநாட்டு வகை பறவை என்பதாலும் வீட்டில் வளர்க்கலாம். ஆனால் கிளிகள் இன்று அழியக்கூடிய நிலையில் இருப்பதால் வீட்டில் வளர்ப்பதற்கும், கிளிகளை வைத்து சோதிடம் பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பறவைகளை வீட்டில் வளர்ப்பதற்கு பெரும்பாலும் அனுமதி இல்லை. வனத்துறை அனுமதி கொடுத்தால் மட்டுமே வளர்க்கலாம். வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் அடிப்படையில் பறவைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முதல் அட்டவணை மற்றும் நான்காம் அட்டவணையில் குறிப்பிட்ட பறவைகளை வீட்டில் வளர்க்கக் கூடாது" என்றார்.

முதல் அட்டவணை பறவைகள்...
வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972-ல் இயற்றப்பட்டது. இச்சட்டம் வன உயிர்களான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியவற்றை பாதுகாக்கின்றது. இச்சட்டத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட அட்டவணைப் பட்டியல்கள் உள்ளன. உயிரினங்களை வேட்டையாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குறிய குற்றமாகும் என்பதை இச்சட்டம் வலியுறுத்தியது.
முதல் அட்டவணையில் (schedule 1) அந்தமான் டீல், அஸ்ஸாம் பாம்பூ பார்ட்ரிட்ஜ், பசாஸ் ஆகிய பறவைகள் முக்கியமானவை. இப்பறவைகளை வீட்டில் வளர்த்தால் கட்டாய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
நான்காம் அட்டவணை
நான்காம் அட்டவணையில் (schedule 4) உள்ள பறவைகளை வீட்டில் வளர்த்தால் அபராதம் விதிக்கப்படும், சிறைத்தண்டனை கட்டாயமல்ல. ஆனால், சிறைத்தண்டனை விதிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
நான்காம் அட்டவணையில் உள்ள பறவைகள்:
அவதாவத் (Avadavat ), அவோசெட் (Avocet), பப்ளர்ஸ் (Babblers) , பார்பெட்ஸ் (Barbets) , பாமௌல்ஸ் (Bamowls), பிட்டர்ஸ் (Bitters), பிரவுன் (Brown headed gull) , புல்புல்ஸ் (Bulbuls), பண்டிங்ஸ் (Buntings), புஸ்டோர்டா (Bustorda), பஸ்தர்-குவாலிஸ் (Bustard-Qualis), குளோரோப்சிஸ் (Chloropsis), செண்டு வாத்து (Comb duck), கோட்ஸ் (Coots),

கார்மோரண்ட்ஸ் (Cormorants), கிரேன்ஸ் (Cranes), குக்கூஸ் (Cuckoos), கர்லேவ்ஸ் (Curlevs), டார்டர்ஸ் (Darters), புறாக்கள் (Doves), டிரோங்கோஸ் Drongos, ஈகிரேட்ஸ் (Egrets), நீலப் பறவை (Fairy Blue Bird), (ஃபால்கன்ஸ் Falcons), ஃபின்சஸ் (Finches), ஃபால்மிங்கோஸ் (Falmingos ) பூங்கொத்தி (Flowerpeckers), ஃபல்காச்சர்ஸ் (Flcatchers), வாத்து (Geese), கோல்டுஃபிஞ்ச் மற்றும் அதன் கூட்டாளி பறவைகள் (Goldfinch and allies), கிரேப்ஸ் (Grebes),

ஜெரான்ஸ் (Gerons), ஐபிஸ் (Ibises), ஐயோரர்ஸ் (Iorars), ஜெய்ஸ் (Jays), ஜகானாஸ் (Jacanas), ஜங்கிள் ஃபவுல் (Junglefowl), கிங்பிஷர்ஸ் (Kingfishers), லார்க்ஸ் (Larks), லோரிகட்ஸ் (Lorikeets) மாக்பீஸ் (Magpies), மன்னிகின்ஸ் (Mannikins), மெகாபோட்ஸ் (Megapodes) , மினிவேட்ஸ் (Minivets), முனியாஸ் (Munias), மைனாஸ் (Mynas), நைட்ஜரா (Nightjara), ஓரியோல்ஸ் (Orioles), ஆந்தை (Owls), ஆஸ்டிராக்ட்சர். (Oysteractchers) , கிளிகள் (Parakeets), பாட்ரிட்ஜஸ் (Partridges), பெலிக்கன்ஸ் (Pelicans), பேசன்ட்ஸ் (Pheasants ), புறாக்கள் (Pigeons) - நீலப்பாறை மட்டும் இவ்வகையில் வராது,
பிப்ட்ஸ் (Pipts), பிட்டாஸ் (Pittas), புளோவர்ஸ் (Plovers), காடைகள் (Quails) - ஜப்பானிய காடைகள் இவ்வகையில் வராது. ரயில்ஸ் (Rails), ரோலர்ஸ் அல்லது ப்ளூ ஜேஸ் (Rollers or Blue Jays), மணற்கூரை பறவை (Sandgrouses),

சாண்ட்பைப்ஸ் (Sandpipes), ஸ்னைப்ஸ் (Snipes), ஸ்பர்ஃபவுல்ஸ் (Spurfowls), ஸ்டார்லிங்ஸ் (Starlings), கல் சுருள் (Stone Curlew) , நாரைகள் (Stone Curlew), ஸ்டில்ட்ஸ் (Stilts), சூரியப் பறவைகள் (Sunbirds), ஸ்வான்ஸ் (Swans), டீல்ஸ் (Teals), துருஷேஸ் (Thurushes), டைட்ஸ் (Tits), ட்ரீபைஸ் (Treepies), டிராங்கன்ஸ் (Trongons), கழுகுகள் (Vultures), வேக்ஸ்பில்ஸ் (Waxbills), தூக்கனாங்குருவி (Weaver Birds), வெள்ளைக் கண்ணி (White-eyes), மரங்கொத்தி (Woodpeckers), ரென்ஸ் (Wrens) ஆகியவை, அட்டவனை நான்கில் உள்ள பறவைகள் ஆகும். இவற்றை வீட்டில் வளர்க்கக் கூடாது.

சமீப காலமாக சில வீடுகளில் வெளிநாட்டுப் பறவைகளை வளர்க்கிறார்கள். வெளிநாட்டுப் பறவைகள் வளர்ப்பதற்கும் Convention on international trade on endangered species of flora and fauna என்ற சர்வதேச அமைப்பிடம் அனுமதி பெற்றிருப்பது அவசியம். இந்தியாவில் சர்வதேச பறவைகளை வளர்ப்பதற்கான நெறிமுறைகளை இந்திய அரசு ஒழுங்கு முறைப்படுத்தத் திட்ட மிட்டுள்ளது" என்றார்.
ஆக, மேலே சொன்ன பறவைகளை வீட்டில் வளர்க்கக் கூடாது என்பதை நினைவில் வையுங்கள் மக்களே... அப்படி வளர்த்தல் அபராதம் அல்லது அபராதத்துடன்கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.