Published:Updated:

தேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா? உண்மை நிலை என்ன? #DoubtOfCommonMan

நியூட்ரினோ ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்
News
நியூட்ரினோ ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்

பூவுலகின் நண்பர்கள் சார்பில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே திட்டத்தைத் தொடங்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Published:Updated:

தேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா? உண்மை நிலை என்ன? #DoubtOfCommonMan

பூவுலகின் நண்பர்கள் சார்பில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே திட்டத்தைத் தொடங்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூட்ரினோ ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்
News
நியூட்ரினோ ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``நியூட்ரினோ ஆய்வு தொடங்கப்பட்டுவிட்டதா? தற்போதைய நிலவரம் என்ன?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் ப.சுவாமிநாதன் அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
DoubtOfCommonMan
DoubtOfCommonMan
`நியூட்ரினோ மற்ற துகள்களுடன் இணைந்து செயல்பட்டால் எவ்விதமான வேதியியல் மாற்றத்தைத் தரும் மற்றும் நியூட்ரினோ தனித்து இயங்கும் போது அதனால் என்னென்ன பயன்களைப் பெறலாம் என்ற நோக்கில் இந்த ஆய்வுக்கூடத்தைத் தொடங்க இருக்கிறோம்'
India-based Neutrino Observatory

அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களுக்குப் பொது மக்கள் மத்தியில் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் இருந்து கொண்டேதான் உள்ளன. அப்படி தேனி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் மனதில் அச்சத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய திட்டம் தேனி மாவட்டத்தில் தொடங்கவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம். நியூட்ரினோ ஆய்வை எங்கு தொடங்கலாம் என இமயம் முதல் குமரிவரை ஆராய்ச்சி செய்து தேனி மாவட்டத்திலுள்ள பொட்டிபுரத்தை ஐ.என்.ஓ (India-based Neutrino Observatory) தேர்வு செய்தது. இந்த அமைப்புதான் இந்தியா முழுவதும் நியூட்ரினோ ஆய்வை முன்னெடுக்கிறது.

வேதியியல் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டதுதான் அணு. அணுவில் நியூட்ரான், எலெக்ட்ரான், புரோட்டான் என்ற துகள்களைக் கண்டறிந்தனர். அதன்பின் அணுவை விடச் சிறிய துகள் உள்ளது எனக் கண்டறியப்பட்டது. அதன் பெயரே நியூட்ரினோ. சிறிய துகள்களாக உள்ள இந்த நியூட்ரினோவின் நிறை மிகவும் குறைவு. விஞ்ஞானிகளின் கவனத்தை இது ஈர்த்ததற்கான காரணம், நியூட்ரினோ மற்ற துகள்களுடன் இணைவதில்லை. `நியூட்ரினோ மற்ற துகள்களுடன் இணைந்து செயல்பட்டால் எவ்விதமான வேதியியல் மாற்றத்தைத் தரும் மற்றும் நியூட்ரினோ தனித்து இயங்கும் போது அதனால் என்னென்ன பயன்களைப் பெறலாம் என்ற நோக்கில் இந்த ஆய்வுக் கூடத்தைத் தொடங்க இருக்கிறோம்' என்று ஐ.என்.ஓ அறிக்கை வெளியிட்டது.

நியூட்ரினோ
நியூட்ரினோ

பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் ``வளர்ந்த நாடுகள் இந்த ஆய்வைத் தொடர்ந்துவரும் நிலையில் இந்தியாவும் இதைக் கையாள முடிவு செய்துள்ளது. இதனால் பொதுமக்களுக்குப் பயன் கிடைக்கும்" என்கிறது ஐ.என்.ஓ.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த ஆய்வை நடத்தினாலும், அந்நாடுகள் ஆய்வுக்கூடங்களை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வெளியேதான் நடத்துகின்றன. ஆனால், நம் நாட்டிலோ பசுமை கொஞ்சும் தேனியில் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். மலையைக் குடைந்து குகை அமைத்து ஆராய்ச்சி செய்ய உள்ளதாக ஐ.என்.ஓ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். குகையில் நியூட்ரினோ உணர் கருவியைப் பொருத்தி இயற்கை முறையில் நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்து பின்பு கருவிகளின் உதவியோடு செயற்கை முறையிலும் நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்ய உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இந்தத் திட்டத்திற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

DoubtOfCommonMan
DoubtOfCommonMan

செயற்கை முறையில் கருவிகளைக்கொண்டு நியூட்ரினோக்களை ஆராய்ச்சி செய்ய உள்ளதால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செயற்கை முறையில் ஆராய்ச்சி செய்தால் நியூட்ரினோவில் உள்ள கதிரியக்கத் தன்மை ஆராய்ச்சியின் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

இது குறித்து சமூக நல ஆர்வலரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான சுந்தர்ராஜன் நம்மிடம் பேசினார். ``நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை தற்போது நிறுத்தி வைத்துள்ளனர். உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி தரும் வரை இத்திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

பூவுலகு சுந்தர்ராஜன்
பூவுலகு சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் சார்பில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே திட்டத்தைத் தொடங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இத்திட்டத்தைத் தொடங்கும் பணி நடக்காது என எதிர்பார்க்கலாம். நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைத் தொடர்ந்தால் இயற்கைக்கும் இயற்கையின் ஒரு பங்கான மனிதர்களுக்கும் தீங்குதான் ஏற்படுமே தவிர பெரிதாக நன்மை ஒன்றுமில்லை" என்றார்.

Doubt of a common man
Doubt of a common man

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!