Published:Updated:

அதிகரிக்கும் வனவிலங்கு தாக்குதல்; ஓராண்டில் 152 பேர் மரணம்... அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

கேரளாவில் ஊருக்குள் நுழைந்ததால் பிடிக்கப்பட்ட யானை
News
கேரளாவில் ஊருக்குள் நுழைந்ததால் பிடிக்கப்பட்ட யானை

கடந்த ஆறு ஆண்டுகளில் வனவிலங்குகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிடும்போது கடந்த ஆண்டுதான் அதிகம்.

கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த விவாதத்தில், மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து வனவிலங்குகள் தொல்லை கொடுப்பது குறித்து எம்.எல்.ஏ ஏ.பி. அனில் குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறுகையில், ``கட்டுபாடற்ற கால்நடை மேய்ச்சல், வன ஆக்கிரமிப்பு காரணமாக வன மிருகங்கள் நாட்டுக்குள் நுழைகின்றன.

வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன்
வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன்

காட்டில் மிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவதாக கூறுவது உறுதிப்படுத்தப்படாத தகவல். கடந்த ஆறு ஆண்டுகளில் வனவிலங்குகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிடும்போது, கடந்த ஆண்டுதான் அதிகம். 2021-2022 ஆண்டுகளில் வன விலங்குகள் மனித எதிர்கொள்ளலால் 97 பேர் மரணமடைந்துள்ளனர். 2022-2023-ம் ஆண்டுகளில் வனவிலங்குகளால் ஏற்பட்ட தாக்குதலில் 152 பேர் மரணமடைந்துள்ளனர். 830 பேர் காயமடைந்துள்ளனர்.

வன விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டங்கள் தற்போது இல்லை. மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் வரம்புகளால் பல விஷயங்களை செய்ய இயலவில்லை. சட்ட திருத்தம் கொண்டுவர சிறப்பு விண்ணப்பம் செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும். மனித - வனவிலங்கு எதிர்கொள்ளலை கட்டுப்படுத்த, 10 ஆண்டுகளுக்கு 1150 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்க மாநில திட்ட வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வன விலங்கு - யானை
வன விலங்கு - யானை

ஐந்து ஆண்டுகளுக்கு இதை செயல்படுத்த, 620 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வழங்கப்படும். வனத்துறையின் அதிவேக தடுப்பு நடவடிக்கை குழுவிடம் போதிய ஆயுதங்கள் இல்லை என புகார் எழுந்துள்ளது. அதற்காக ஒரு கோடி ரூபாய்க்கு துப்பாக்கிகள் கொள்முதல்செய்து வழங்கப்பட உள்ளது" என்றார்.