Published:Updated:

`மாண்டஸ்' இல்லீங்க; அது `மன்னூ ஸோ'; புயலுக்குப் பெயர் சூட்டியது இப்படித்தான்!

புயல்
News
புயல்

இப்போது மாண்டஸ் என்று சொல்லப்படும் பெயரைக் கொடுத்திருப்பது ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம்தான். உலக அளவில் புயலுக்குப் பெயர் சூட்டுவதற்காக, புயல்கள் உருவாகும் கடற்பிரதேசத்தில் இருக்கும் நாடுகளின் குழு செயல்பட்டு வருகிறது.

Published:Updated:

`மாண்டஸ்' இல்லீங்க; அது `மன்னூ ஸோ'; புயலுக்குப் பெயர் சூட்டியது இப்படித்தான்!

இப்போது மாண்டஸ் என்று சொல்லப்படும் பெயரைக் கொடுத்திருப்பது ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம்தான். உலக அளவில் புயலுக்குப் பெயர் சூட்டுவதற்காக, புயல்கள் உருவாகும் கடற்பிரதேசத்தில் இருக்கும் நாடுகளின் குழு செயல்பட்டு வருகிறது.

புயல்
News
புயல்

மாண்டஸ் என்கிற வார்த்தை ஒரே நாளில் உலகப் புகழ்பெற்றுவிட்டது. வங்கக்கடலில் உருவாகி, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர மாநிலத்தை நோக்கி இப்போதைக்கு நகர்ந்து கொண்டிருக்கும் புயல் சின்னம்தான் இந்த மாண்டஸ். உண்மையில் இந்தப் புயலை மாண்டஸ் என்று அழைப்பது சரியல்ல. 'மன்னூ ஸோ' என்பதுதான் சரி.

புயல்
புயல்

இதென்ன கலாட்டா என்கிறீர்களா?

இப்போது 'மாண்டஸ்' என்று சொல்லப்படும் பெயரைக் கொடுத்திருப்பது ஐக்கிய அரபு எமிரேட். உலக அளவில் புயலுக்குப் பெயர் சூட்டுவதற்காக, புயல்கள் உருவாகும் கடற்பிரதேசத்தில் இருக்கும் நாடுகளின் குழு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியத்தில் ஏற்படும் புயல்களுக்கு அப்பகுதியில் உள்ள நாடுகளின் குழு பெயர் சூட்டுகிறது. இக்குழுவில் உள்ள ஒவ்வொரு நாடும் முன்கூட்டியே பெயர்களைப் பரிந்துரைக்கும். அந்தப் பெயர்களை அடுத்தடுத்து அந்தப் பிராந்தியத்தில் உருவாகும் புயல்களுக்கு சூட்டுவார்கள். அந்த அடிப்படையில்தான்,  ஐக்கிய அரபு எமிரேட் நாடு பரிந்துரைத்திருக்கும் மாண்டஸ் என்கிற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மாண்டஸ் என்பது ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வார்த்தையாகும். உண்மையில் ஐக்கிய அரபு எமிரேட் அரசு கொடுத்திருக்கும் அந்த வார்த்தைக்கான அரபுமொழி உச்சரிப்பு, மன்னு ஸோ. அதுவும் அல் மன்னூ ஸோ என்பதுதான் முழுமையான வார்த்தை. இதற்குப் பொருள், 'பொக்கிஷப் பெட்டி' என்பதாகும்.

எந்தமொழி வார்த்தையாக இருந்தாலும், அதை ஆங்கிலத்தில் பயன்படுத்தும்போது ஆங்கில வார்த்தையாகவே உச்சரிப்பிலும் மாற்றிவிடுவது காலகாலமாகவே தொடர்கிறது. அப்படித்தான், மன்னூ ஸோ என்பது மாண்டஸ் ஆகியுள்ளது. அதிலும் இது ஆங்கிலமாக்கப்பட்டு மேண்டஸ் என்றுதான் உச்சரிக்கப்படுகிறது.

புயல் தாக்கம்
புயல் தாக்கம்

ஆனால், அதையும் தமிழுக்காக மாண்டஸ், மண்டஸ் என்றெல்லாம் அவரவர்க்குத் தெரிந்த வகையில் எழுதியும் உச்சரித்தும் கொண்டுள்ளனர். எப்பொழுதுமே, ஒரு வார்த்தை எந்த மொழியினுடையதோ.. அந்த மொழியின் உச்சரிப்பு சிதையாமல் பயன்படுத்துவதுதான் சரியானது. சமயங்களில் அது சாத்தியப்படாமல் போகலாம். அந்த சந்தர்ப்பங்களில் மட்டும், கிட்டத்தட்ட அதற்கு இணையான உச்சரிப்பு வரும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். அதற்காக ஒரேயடியாக மாற்றுவது, சரியாக இருக்காது. அதன் மூலப்பொருளே சிதைந்துபோய், வேறு பொருள் தரும் அளவுக்கு மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

உலகம் முழுக்க கடலில் உருவாகும் புயல்களுக்கு, அந்தந்த மண்டலங்களில் உள்ள சிறப்பு வானிலை மையங்கள் (Special meteorological stations), வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் (Cyclone Warning Centers) பெயரிடுவதை வழக்கமாக வைத்துள்ளன. அந்த வகையில், இந்திய வானிலை ஆய்வு மையம் உட்பட உலகில் மொத்தம் 6 சிறப்பு வானிலை மையங்கள் இயங்கிவருகின்றன.

புயல் தாக்கம்
புயல் தாக்கம்

வங்காள விரிகுடா, அரபிக்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொறுப்பில் பெயர் சூட்டப்படுகிறது. அதற்காக, இந்த மண்டலத்தில் உள்ள 12 நாடுகளில் ஆலோசனைகள் பெறப்படுகின்றன. இதற்காக உருவாக்கப்பட்ட குழுவில் 2000-ம் ஆண்டிலிருந்து பங்களாதேஷ், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்திருந்தன. 2018 -ம் ஆண்டிலிருந்து ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் ஆகிய ஐந்து நாடுகள் இணைந்துள்ளன.

 -பூநி