அன்புச் சுட்டிகளுக்கு...
பூ.கொ.சரவணன் பேசுகிறேன்.
'செல்வத்துள் எல்லாம் தலை’ என்று செவிச் செல்வத்தைக் குறிப்பிட்டார் வள்ளுவர். நாம் பேசுவதைக் குறைத்து, பிறர் பேசுவதை அதிகம் கேட்கும்போதுதான், நம் அறிவு விரிவுபெறும். 'ஒரு தேதி... ஒரு சேதி’ உங்கள் செவிச் செல்வத்தின் சேமிப்பை அதிகமாக்கும் என நம்புகிறேன்.

றீடிசம்பர் என்றதும் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். கிறிஸ்துமஸ் மரம், இயேசு பிறப்பதற்கு முன்பிருந்தே விழாக்களின் நாயகனாக இருந்திருக்கிறது. பனிக் காலங்களில் பிறந்த நாளைக் கொண்டாட, இந்த மரங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் யார்?
றீவிக்டோரியா மகாராணி மூலம்தான் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் பழக்கம் பரவியது. அது எப்படி?
றீஇந்த மரத்தில் மின்விளக்கை அலங்கரிக்கும் பழக்கத்தைத் தொடங்கியவருக்கும், எடிசனுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன?
இதுபோல ஒவ்வொரு நாளுக்கும் பல சுவையான செய்திகளுடன் காத்திருக்கிறேன்.
