Published:Updated:

ஹலோ வாசகர்களே...!

வங்கிகளும் வட்டியைக் குறைக்கட்டும்!

ஹலோ வாசகர்களே...!

வங்கிகளும் வட்டியைக் குறைக்கட்டும்!

Published:Updated:
ஹலோ வாசகர்களே...!

மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து உத்தரவிட்டிருக்கிறார். ஆர்பிஐ கவர்னரின் இந்த அறிவிப்பு தை 1-ம் தேதி அன்று வெளியானதால், நாம் இதை பொங்கல் பரிசாக எடுத்துக்கொள்ளலாம். ஆர்பிஐயின் இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர்களும் தொழில்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்று இருக்கின்றனர்.

ஆர்பிஐ இப்போது செய்திருக்கும் வட்டிக் குறைப்பானது ஒரு சிறு தொடக்கம் என்றாலும், பணவீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பட்சத்தில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் 50 - 75 அடிப்படைப் புள்ளிகளை ஆர்பிஐ குறைக்க வேண்டும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 1.5% அளவுக்கு கடன் களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால்தான் தொழில்துறையைச் சேர்ந்தவர் கள் அதிக அளவில் தொழில் கடன் வாங்க முன்வருவார்கள்.

ஆனால், கடன்களுக்கான வட்டியை ஆர்பிஐ மட்டும் குறைத்தால் போதாது; ஆர்பிஐ குறைப்பதற்கேற்ப இந்தியா முழுக்க உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தாக வேண்டும். தற்போது ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைத்துவிட்டபோதிலும், சில சிறிய வங்கிகள் மட்டுமே வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. பெரிய வங்கிகள் எதுவும் இதுவரை வட்டி விகிதத்தைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிடவில்லை. இனியாவது, வட்டிக் குறைப்பை எல்லா வங்கிகளும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஹலோ வாசகர்களே...!

தொழிலதிபர்களும் கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் கணிசமாக குறைத்தபின்பே புதிய தொழில் முயற்சி களை மேற்கொள்வது என்று நினைக்கா மல், இப்போதே தொழில் விரிவாக்கத்தைத் தொடங்க வேண்டும். இப்போதிருக்கும் வட்டி விகிதம் இன்னும் அதிகமாகக் குறைய வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தால், தற்போது கிடைக்கும் தொழில் வாய்ப்பினை தொழில் நிறுவனங்கள் இழக்கவே வேண்டியிருக்கும்.

வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி 13 சதவிகிதத்துக்குமேல் இருக்கும்போது, கடன் வளர்ச்சியானது 11 சதவிகிதத்துக்கும் கீழ் சென்றுள்ளது. இந்த நிலை மாறி கடன் வளர்ச்சி வேகமெடுக்க வேண்டுமானால், வங்கிகளும் தொழிலுக்கான கடன் வழங்குதலை அதிகப்படுத்த வேண்டும். இதெல்லாம் நடந்தால் மட்டுமே இந்தியாவில் தொழில் வளர்ச்சி வேகமாக வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!                                                        
 

 - ஆசிரியர்.