Published:Updated:

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

Published:Updated:

அன்புச் சுட்டி நண்பர்களே...

ஒரு தேதி...ஒரு சேதி...

நாம் தினந்தோறும் எத்தனையோ மனிதர்களைப் பார்க்கிறோம். எத்தனையோ மனிதர்களைப் பற்றி கேள்விப்படுகிறோம்.  அத்தனை பேரையும் நினைவில் வைத்திருப்பது இல்லை. சிலரின் பெயரை  கேள்விப்பட்டிருப்போம். அவரின் சாதனைகளை அறியும்போது, இவ்வளவு நாட்கள் தெரிந்துகொள்ளாமலே இருந்திருக்கிறோமே என்று வருந்துவோம். இனி அப்படி கவலைப்படவே வேண்டாம். இந்தச் சமூகத்தில் மறக்க முடியாத தடம் பதித்த மனிதர்களைப் பற்றிய செய்திகளை அறிய, 'ஒரு தேதி ஒரு சேதி’ அழைக்கிறது. சிறப்பான செய்திகளை அளிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலம் காலமாக சொல்லிவருவதை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. எதையும் ஆராய்ந்து உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்று உலகத்துக்கு உணர்த்திய அறிவியல் மேதை கலிலியோ. இவர் கண்டறிந்து கூறிய உண்மைக்காக, கடுமையான சிறைத் தண்டனை பெற்றார். இவரது நூலுக்கும் தடை விதிக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து, இவர் சொன்னதே உண்மை என தண்டித்தவர்களே உணர்ந்து மன்னிப்பு கேட்டனர்.இத்தகைய மேதையைப் பற்றி மேலும் அறிய வேண்டுமா?

ஒரு தேதி...ஒரு சேதி...

பள்ளி படிப்பிலிருந்து பாதியில் விரட்டப்பட்ட இவருக்கு, சூரியனுக்கு அடுத்து இந்த உலகத்தை வெளிச்சமாக்கியதில் பெருமை உண்டு.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர். இவரின் மரணத்தின்போது, 'இவருக்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது’ என்று மின்விளக்கை அணைத்துக் கூறவைத்த அறிவியலாளர், தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி கொஞ்சம் வெளிச்சம் பெறலாமா?

ஆணுக்குப் பெண் ஒருபோதும் சளைத்தவர் இல்லை என நிரூபித்த வீரப் பெண்மணி. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து சிறை சென்ற துணிச்சல் நாயகி. 'அபராதம் செலுத்தினால் விடுதலை ஆகலாம்’ என்றதை   மறுத்து, இன்னல்களை எதிர்கொண்ட போர் குணப் பெண்மணி. சிறையில் இருந்து விடுதலையான பிறகு, உடல் நலிவடைந்து இறந்தார். அப்போது காந்தியடிகள், ''இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள். மாதர்களுக்கேயுரிய துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும் தன்மானமும்கொண்டவள் தில்லையாடி வள்ளியம்மை. அவளது தியாகம், இந்திய சமூகத்துக்கு நிச்சயம் பலன் அளிக்கும்!'' என்று உருகினார். தில்லையாடி வள்ளியம்மை பற்றி தெரிந்துகொள்வது நமது கடமை அல்லவா!

இன்னும் பல தேதிகள்... இன்னும் பல சேதிகள்!

ஒரு தேதி...ஒரு சேதி...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism