Published:Updated:

தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!

உங்களைச் செம்மைப்படுத்தும் செவி உணவு

தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!

உங்களைச் செம்மைப்படுத்தும் செவி உணவு

Published:Updated:
தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!

சுட்டிகளே... பெற்றோர்களே...

‘ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்’ என்று உங்களுக்கு யாராவது கதை சொல்ல ஆரம்பித்ததும், ‘இது புதுக்கதையா, ஏற்கெனவே சொன்ன கதையா?’ என்று கேட்பீர்கள்தானே...உங்களுக்கு, தினந்தோறும் புதுப்புது கதைகள் சொல்லி அசத்தப்போகிறார்கள், கதை சொல்லிகள். இந்தக் கோடை விடுமுறையை, சுட்டித் தமிழ் கதைகளோடு கொண்டாடுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!

வேலு சரவணன்: உலகம் முழுவதும் சுற்றி, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி, நாடகம் நடிக்கவைத்து, உற்சாகம் தரும் அற்புதமான கதை சொல்லி. நமது சுட்டி விகடன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருபவர். புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர். இவர் கதைகளில் பூதம், கோமாளி, சிங்கம்... என விதவிதமான கதாபாத்திரங்கள் வந்து, சுவாரஸ்யப்படுத்தும். இவர் கதை சொல்வதை, நீங்கள் தொலைபேசி வழி கேட்டாலும், நேரிலே சொல்வதுபோல இருக்கும். என்ன, கேட்கத் தயாரா நண்பர்களே?

தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!

யாழினி: சேலம், ஸ்ரீசாரதா மெட்ரிக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்புக்குச் செல்லப்போகும் கதை சொல்லி. ‘காடுகள் பெரிசா அழகா இருந்துச்சு’ என்ற கதைப் புத்தகம்  எழுதி இருக்கிறார். கதைகள் மூலம்... மரங்கள், விலங்குகள், பறவைகள்... என ஒரு காட்டையே வரவைத்துவிடுவார். உங்களுக்காகவே, பல சுவாரஸ்யமான கதைகளுடன் காத்திருக்கிறார். யாழினியின் கதைகளைக் கேட்க நீங்கள் ரெடியா?

இந்த நம்பருக்கு டயல் செய்யுங்கள்...தினம் ஒரு கதையைக் கேளுங்கள்!

தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism