Published:Updated:

அன்பான ஆசிரியர்களே...

அன்பான ஆசிரியர்களே...

அன்பான ஆசிரியர்களே...

அன்பான ஆசிரியர்களே...

Published:Updated:

ழை வந்தால் சிறுவர்களுக்கு  மகிழ்ச்சி வரும். காகிதத்தில் கப்பல் செய்து விளையாடுவார்கள். ஆனால், சமீபத்தில் பெய்த மழையில் சிக்கியவர்களை மீட்க, படகே வந்ததைப் பயத்தோடு பார்த்தார்கள். மாபெரும் இயற்கைப் பேரிடரில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஈடுசெய்ய இயலாதது. பலரின் பாட நூல்கள், சீருடைகள் என எல்லாவற்றையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. அரசால் திரும்பவும் அவை வழங்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், தங்கள் சார்பாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள், எந்த வகையில் உதவலாம்?

அன்பான ஆசிரியர்களே...

•  மழை பாதிப்பால் மனதளவில் சோர்ந்து போயிருக்கும் மாணவர்களுக்கு ஆறுதல் கூறி, இதைவிடப் பெரிய பேரிடர்களில் இருந்து உலகம் மீண்டதைச் சொல்லி, தன்னம்பிக்கை அளிக்க வேண்டும்.  அவர்களின் வீடு தேடிச் சென்று பெற்றோரிடம் பேசுங்கள். அது அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  மாணவர்கள் எழுதிய குறிப்பேடுகள் வெள்ளத்தில் சேதமாகி இருந்தால், ‘கவலைப்படாதே, அவற்றைத்  திரும்ப எழுத வேண்டாம்’ எனக் கூறலாம். விடைக் குறிப்புகளைப் பாட நூலிலேயே குறித்துக் கொடுக்கலாம்.

•  தேர்வை நினைத்து மாணவர்கள் பயப்படுவர்.  ‘தேர்வைச் சிறப்பாக எழுதத் தேவையான நாட்கள் இருக்கின்றன. அதற்குள் தயாராகிவிடலாம்’ என்று கூறி,  அதற்கான வழிமுறைகளைச் சொல்லலாம்.

•  கேள்வித்தாளைப் பகுதிப் பகுதிகளாகப் பிரித்து, குறிப்பிட்ட நாட்களை அதற்கு ஒதுக்கலாம். அதுபோல, ஒவ்வொரு பாடத்திலும் முக்கியப் பகுதிகளை, சுருக்கமாக நினைவூட்டுவது அவசியம். வெள்ளத்தில் பாதிக்கப்படாத மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பாடச் செயல்களில் உதவலாம்.

•  பேனா, பென்சில், ஜியோமெட்ரி பாக்ஸ் போன்ற பொருட்களை இழந்த மாணவர்களுக்கு, உதவி செய்பவர்களை ஒருங்கிணைத்து, உதவி செய்யவைக்கலாம்.

•  எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், மாணவர்களின் தேவையைக் கூறி உதவி கேட்டோம். பள்ளியின் பழைய மாணவர்கள் மற்றும் சமூக இயக்கங்கள், மாணவர்களுக்கு உதவினர். நேரடிப் பழக்கம் இல்லாத மனிதர்களே  உதவும்போது, நம் மாணவர்களுக்கு நம்மாலான உதவி செய்வதைக் கடமை என உணர்வோம். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை டானிக் அளிப்போம்!

- ரத்தின புகழேந்திபடம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism