Published:Updated:

பாசமான பெற்றோர்களே...

பாசமான பெற்றோர்களே...

பாசமான பெற்றோர்களே...

பாசமான பெற்றோர்களே...

Published:Updated:

மிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். குறிப்பிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடப்பட்டது. பொதுவாகவே, தேர்வு மாதம் நெருங்க நெருங்க பிள்ளைகளுக்கு மனஅழுத்தம் உண்டாகும். இந்த நீண்ட விடுமுறையால் கூடுதல் மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு நீங்கள்தான் துணையாக இருக்க வேண்டும்.

பாசமான பெற்றோர்களே...

மாணவர்களின் பள்ளி நேரம், சிறப்பு வகுப்புகள், டியூஷன் எனத் தொடர்ச்சியாகப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். அங்கே அதிகப்படியான படிப்புச் சுமையைக் கொடுத்திருப்பார்கள். வீட்டிலும் அதுபோன்ற அழுத்தத்தைக் கொடுக்காமல், அவர்களோடு சிரித்துப் பேசுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடுதலாகப் படிக்க வேண்டும் என்பதற்காக பிள்ளைகளின் தூங்கும் நேரத்தைக் குறைத்துவிடாதீர்கள். தூங்கும் நேரம் குறையும்போது, பள்ளியில் பாடங்களைக் கவனிக்கும் திறன் பாதிக்கப்படும். எனவே, அவர்கள் இயல்பாகத் தூங்கும் நேரத்தை மாற்றிவிடாதீர்கள்.

பிள்ளைகளின் சின்னச் சின்னப் பொழுதுபோக்குகளைக்கூட அனுமதியுங்கள். அது, அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். அதனால், மேலும் நன்றாகப் படிப்பார்கள்.

‘இதைத்தான் படிக்க வேண்டும்’ என ஆணையிடாதீர்கள். அவர்களுக்கு விருப்பமான பாடங்களைப் படிக்க அனுமதியுங்கள். சில விஷயங்களை மட்டும் ஆலோசனையாகக் கூறுங்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் பிள்ளைகளின் படிப்பை நிறுத்திவிடாதீர்கள். உங்களுக்குத் தெரிந்து அப்படி யாரேனும் படிப்பை இடைநிறுத்தம் செய்திருந்தால் அவர்களுக்குத் தகுந்த ஆலோசனை சொல்லி, அவர்களின் படிப்பைத் தொடரச் செய்யுங்கள்.

- சுடரொளி, படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism