Published:Updated:

மெகா பரிசுப் போட்டி!

மெகா பரிசுப் போட்டி!

மெகா பரிசுப் போட்டி!

மெகா பரிசுப் போட்டி!

Published:Updated:
மெகா பரிசுப் போட்டி!

ஹாய் வாசகிகளே!

அவள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் விதம்விதமான 18 போட்டிகள்... இதுவரை 15 போட்டிகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதோ, கடைசி 3 போட்டிகளுக்கான அறிவிப்பு. பங்கெடுங்கள்... பரிசை வெல்லுங்கள்.

போட்டி எண் 16

தமிழோடு விளையாடு

மெகா பரிசுப் போட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீழ்க்காணும் நான்கு வகையான உள் போட்டிகளைக் கொண்டதே `தமிழோடு விளையாடு’. இந்த நான்கையும் `தமிழோடு விளையாடு’ என்று தலைப்பிட்டு அனுப்பவும். இந்த நான்குக்கும் மிகச் சரியான விடைகளை எழுதி அனுப்புபவர்களுக்கே பரிசு. 

கீழே கலைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியை கவனமாகப் படித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பந்தமில்லாமல் சிதறிக் கிடக்கும் வார்த்தைகளை சரியான வரிகளாக தொகுத்துக்கொண்டே வந்தால் ஒரு பிரபலமானவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று கிடைக்கும்.

1. புகழ்பெற்ற நரேன் பக்தி நிறைந்த படகோட்டிக்கு கொடுக்க பணமில்லை. அவற்றுக்கான பரிகாரங்களையும், அதன் பிரச்னைகளையும் பற்றி சிந்தித்தவராய் கொந்தளிக்கும் நெஞ்சுடன். சுறா மீன்கள் நிறைந்த படகில் ஒற்றைக்காலில் நின்று மூன்று நாட்கள் சென்றார். அல்லும் பகலும் கடலின் மனநிலையில். கடலை விரும்பினார். பாறையை தவம் செய்தமையால் புனிதம்பெற்றதாக அவரிடம் பார்வதி தேவி உணர்ச்சி கண்ணுற்றார். பொங்கிய அப்பாறையின்மீது குமரி அம்மன் குமரியை நீந்தியே கடந்து புனிதப்பாறையை தரிசித்தார் டிசம்பர் மாத இறுதியில் அப்பாறைக்கு செல்லவேண்டுமென சிந்தை இருந்தார். கடலோரத்துக்கு சென்று ஏற்றிசெல்லும் பாறைக்கு கனிந்தவராய் வந்தடைந்தார். ஆலயத்துக்கு சிறிது தொலைவில் அப்பாறையை கண்ட நரேன் அப்பாறையிலேயே  காட்சியளித்த அம்மனை அடைந்தார். அதன்பின்னர் அவர் 1892-ம் ஆண்டு பாரதநாட்டினை காணவேண்டும் என்ற இருந்தார். கருதப்பட்டது

2. கீழே கொடுக்கப் பட்டிருக்கும் தூய தமிழ்ச் சொற்களுக்கு இணையாக.... நாம் தற்போது வழக்கில் பயன்படுத்திவரும் சொற்களை எழுதுக‌.

மந்தணம் -

குரிச்சி -

உமதகி -

மதிரிப்பு -

கூந்தன்மா -


3. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பாடலின் வரி, எந்த கவிஞரால் எழுதப்பட்டது என்பதைக் கண்டுபிடித்து இந்த வரி இருக்கும் முழு பாடலை வரிசைப்படி எழுதுக.

``மனயாளுந் தெய்வமன்றோ? மதிகெட்  டீரே!”

4. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு 4 வரிகளுக்கு மிகாமல் பதில் எழுதி அனுப்புக.

இன்று முதல் வேறு ஒரு பிறவிக்கு மாறிக்கொள்ள உங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால், என்னவாக மாற விருப்பம்... ஏன்?

போட்டி எண் 17

படம் பார்த்து கதை எழுதுங்கள்

மெகா பரிசுப் போட்டி!

ஒரு கதைக்கான 5 வெவ்வேறு படங் களை ஒன்றாக கீழே இணைத்துக் கொடுத் திருக்கிறோம். இங்கே இருக்கும் எல்லா படங்களையும் இணைத்து ஒருபக்க‌ கதை எழுத வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் படங்களின் வரிசைப் படிதான் கதை எழுதவேண்டும் என்ப தில்லை. இந்தக் கதைக்கு பொருத் தமான தலைப்பையும் தவறாமல் நீங்களே எழுதி அனுப்ப வேண்டும்.

போட்டி எண் 18

வெட்டுங்க... ஒட்டுங்க...

மெகா பரிசுப் போட்டி!

இங்கே பிரித்துப் போடப்பட்டிருக்கும் புகைப்படங்களைச் சரியான முறையில் வெட்டுங்கள். வெட்டிய துண்டுகளை ஒரு வெள்ளைத்தாளில் சரியாக‌ ஒட்டினால் முழுமையான புகைப்படம் கிடைக்கும். அந்தப் படத்துக்கு பொருத்தமான அட்டகாசமான ஒரு கமென்ட்டை 2 வரிகளுக்குள் எழுதி அனுப்ப வேண்டும். படத்தை சரியாக இணைத்து சூப்பராக கமென்ட் கொடுத்தால் காத்திருக்கிறது தங்கப்பரிசு.

போட்டி 16, 17, 18 ஆகியவற்றுக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.1.2016

கடந்த 12.1.2016 இதழில் அறிவிக்கப்பட்ட போட்டிகள்...

13. என்னால் ஏற்றம்பெற்ற என் குடும்பம்

சாதாரண நிலையில் இருந்த உங்கள் குடும்பத்தை (பிறந்த அல்லது புகுந்த வீடு), இன்று நல்ல நிலைக்கு உயர்த்தியவரா நீங்கள்? இதற்காக நீங்கள் கடந்து வந்த பாதையை விரிவாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் எழுதி அனுப்புங்கள். உங்களின் உன்னதமான முயற்சி, பலருக்கும் உந்துசக்தியாக, வழிகாட்டியாக விரிந்தால்... உங்களுக்குக் காத்திருக்கிறது தங்கப் பரிசு!

14. மெகந்தி

உங்களின் வலது அல்லது இடது கையில் (முழங்கை வரை) மெகந்தி போட வேண்டும். எந்த வகையான மெகந்தியாக இருந்தாலும் நன்று. ஆனால், எக்காரணம் கொண்டும் மெகந்தி ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது. மெகந்தியை கலர்கள் கொண்டும் அலங்கரிக்கலாம். மெகந்தியை நீங்களே போட்டுக்கொள்ளலாம் அல்லது மற்றவருக்கு போட்டுவிடலாம். எப்படியிருந்தாலும் அதை

போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும். மெகந்தியை நீங்களே போடுவதை போட்டோ உறுதிபடுத்துவதாக இருக்க வேண்டும். கொள்ளைகொள்ளும் அழகுடன் கைகளை அலங்கரிப்பவருக்கு காத்திருக்கிறது தங்கப்பரிசு!

15. அண்ணன் - தங்கை /அக்கா - தம்பி / அப்பா - மகள்

உங்களின் அண்ணன், தம்பி அல்லது அப்பாவுடன் பாசம், மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி பொங்கும் தருணங்கள் எத்தனை எத்தனையோ உங்கள் நெஞ்சுக்குள் புதைந்து கிடக்கும். அதையெல்லாம் உருகி உருகி எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தங்கையாக, அக்காவாக, மகளாக அதையெல்லாம் அனுபவித்து எழுதுங்கள். அண்ணன், தம்பி அல்லது அப்பா என மூன்று தலைப்பில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று தலைப்புகளிலுமே ஒருவர் எழுதி அனுப்பலாம். ஆனால், ஒவ்வொன்றையும் தனித்தனியாக எழுதி அனுப்ப வேண்டும். அண்ணன்/தம்பி/அப்பாவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களையும் அனுப்ப வேண்டும்.

போட்டி 13, 14, 15 ஆகியவற்றுக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.1.2016

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism