Published:Updated:

தேசத் தலைவர்கள் முதல் சோட்டா பீம் வரை!

தேசத் தலைவர்கள் முதல் சோட்டா பீம் வரை!

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் என வைரலாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நவீன காலத்தில், அஞ்சல் என்ற வார்த்தையே அருங்காட்சியகத்துக்குப் போய்விடும் போலிருக்கிறது. அந்த நிலையை மாற்ற, புதிய திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறது அஞ்சல்துறை.

தேசத் தலைவர்கள் முதல் சோட்டா பீம் வரை!

தபால்தலை சேகரிப்பின் அவசியத்தை எடுத்துரைக்க, டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய, அஞ்சல்தலை சேகரிப்பு நிலையத்தை, திருச்சி தலைமைத் தபால் நிலையத்தில் தொடங்கியிருக் கிறார்கள். பள்ளி மாணவர்கள் தினந்தோறும் அங்கே வந்து, பல அரிய தபால்தலைகளைக் கண்டு ரசிக்கிறார்கள். அவர்களுக்கு தபால்தலையின் வரலாறு பற்றிச் சொல்கிறார்கள்.

திருச்சி தலைமைத் தபால் நிலையத்தின் முதுநிலை அதிகாரி ராஜசேகரன், ‘‘தபால்தலை சேகரிப்பும் அதுபற்றிய படிப்புக்கும்் ‘பிலாடெலி’ (philately) என்று பெயர். ஒவ்வொரு மாவட்ட தலைமை தபால் நிலையத்திலும் தபால்தலை சேகரிப்பு நிலையம் உள்ளது. தபால்தலை சேகரிப்புப் பழக்கத்தை அனைவரிடமும் உருவாக்குவதே இதன் நோக்கம். மாணவர்களிடம் இந்தப் பழக்கத்தை உருவாக்க, வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் பல நவீன திட்டங்களைச்  செயல்படுத்திவருகிறோம்’’ என்கிறார்.

எதற்காக தபால்தலைகளைச் சேகரிக்க வேண்டும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தேசத் தலைவர்கள் முதல் சோட்டா பீம் வரை!

‘‘தபால்தலை சேகரிப்பு என்பது பொழுபோக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு நாட்டின் வரலாறு, கலாசாரம், நாட்டின் பெருமைமிகு நிகழ்வுகளை அறிய உதவும் அற்புதமான காலக் கண்ணாடி. ஒவ்வொரு அஞ்சல்தலையும், வரலாற்றை நமக்கு சொல்லித்தரும். எதையும் ஆழ்ந்து கற்கும் ஆற்றலைத் தூண்டும். விலங்குகள், பறவைகள், உலகத் தலைவர்கள், கண்டுபிடிப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளில் சேகரிக்கலாம். மத்திய அரசு விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கே வரலாம். மாணவர்களை வரவேற்கவும், கண்காட்சி பற்றி விளக்கவும் காத்திருக்கிறோம்’’ என்கிறார் ராஜசேகரன்.

ஆர்வமுடன் தபால்தலை சேகரிப்புக் கண்காட்சியைப் பார்வையிட்ட மாணவர் சக்திவேல், ‘‘இங்கே வந்தது ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்துச்சு. ஸ்டாம்ப்னா தலைவர்கள், கட்டடங்கள், விலங்குகள் படங்கள்தான் இருக்கும்னு நினைச்சேன். சிங்கம் - முயல், குரங்கு - முதலை, காகம், பாம்பு போன்ற பஞ்ச தந்திரக் கதைகளை விளக்கும் ஸ்டாம்ப்ஸ் எல்லாம் இங்கே இருக்கு. சோட்டா பீம் ஸ்டாம்பைப் பார்த்து குஷியாயிட்டேன். இனிமே, நானும் ஸ்டாம்ப்ஸ் கலெக்‌ஷன்ல இறங்கப்போறேன்’’ என்றார்.

‘‘நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஸ்டாம்ப்ஸ் கலெக்ட் பண்றதையும், அதைப் பற்றிய குறிப்பு எழுதுவதையும் தொடர்ந்த  அமெரிக்க ஜனாதிபதி ரூஸ் வெல்ட் பற்றிய செய்தியை இங்கேதான் தெரிஞ்சுகிட்டேன்’’ என வியக்கிறார் மாணவர் கமலதர்ஷன்.

தபால்தலை சேகரிக்கும் பிலாடெலி உறுப்பினர் ஆவது எப்படி?

தேசத் தலைவர்கள் முதல் சோட்டா பீம் வரை!

மாவட்ட தலைமைத் தபால் நிலையத்தில் உள்ள பிலாடெலி பிரிவில், ஒரு புகைப்படம் மற்றும் பள்ளி அடையாள அட்டையுடன் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, வைப்புக் கணக்கு தொடங்கி உறுப்பினர் ஆகலாம். மாதந்தோறும் வெளியிடப்படும் புதிய அஞ்சல் தலைகள், முதல் நாள் வெளியீட்டு உறை, வருடவாரியாக வெளிவந்த அஞ்சல் தலைகளின் தொகுப்பு போன்றவை தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நூறாண்டு கால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கவும், பல நாடுகளின் கலாசாரங்களைப் புரிந்துகொள்ளவும், பழைமையுடன் புதுமையை அறியவும் உதவும் தபால்தலை சேகரிப்பில் இன்றே ஈடுபடுவோமே!

- க.பிரபாகரன் படங்கள்: தி.கௌதீஸ்