அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

ஹலோ வாசகிகளே,

‘பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்’ - நம் அவள் விகடனின் 18-ம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தை அடுத்து முன்னெடுத்த 18 பவுன் தங்கம் மெகா பரிசுப்போட்டிகளில் இப்படித்தான் ‘தெறி’ கிளப்பிவிட்டீர்கள். வந்து குவிந்த லெட்டர், மெயில்கள் எங்களைத் திணறடித்துவிட்டன. 18 போட்டிகளில் ஏற்கெனவே மூன்று போட்டிகளின் வெற்றியாளர்களை அறிவித்த நிலையில், இதோ... கிராஃப்ட் போட்டி, ஸ்லோகன் போட்டி, கார்டன் டு கிச்சன் போட்டிகளுக்கான முடிவுகள்.

அசத்தலான கற்பனைத்திறனைப் பயன்படுத்தி கலர்ஃபுல்லாக, கலக்கலாக உருவாக்கியிருந்த கிராப்ஃட், ‘இந்த லைன் நல்லாயிருக்கே’ என்று ரசித்துப் படிக்கவைத்த ஸ்லோகன்கள், வீட்டுமாடியில் இப்படி ஒரு சொர்க்கத்தையே உருவாக்க முடியுமா என்று ரசிக்கவைத்த வீட்டுத்தோட்டம்... என இந்த மூன்று போட்டிகளின் போட்டியாளர்களையும் கவனமாகப் பரிசீலித்து, நடுவர்கள் தேர்ந்தெடுத்த வெற்றியாளர்களும், தேர்வு குறித்த நடுவர்களின் விளக்கங்களும் இங்கே...

கிராஃப்ட் போட்டி

(போட்டி எண் 4)


நடுவர்: கிராஃப்ட் கலையில் முன்னோடியான, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதுபெற்ற மாலதி.

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

‘‘எதையும் ரெடிமேடாக வெளியில் வாங்காமல், சிப்பிகள், தென்னை மரப்பூக்கள், பனை ஓலை என இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்தே, அழகாக வண்ணம் தீட்டி இந்த `ஃப்ளவர் வாஸ்'ஸை நுணுக்கமாக உருவாக்கியிருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த வாகீஸ்வரி. அவருக்கு என் வாழ்த்துகள்!’’

ஸ்லோகன் போட்டி

(போட்டி எண் 5)


நடுவர்: பட்டிமன்றப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா. 

தலைப்பு: அவள் 16

ஸ்லோகன்:    இளமைக்குள் இளமை - அதுவே அவள் விகடனின் புதுமை!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

‘‘பொதுவாகப் பெண்களுக்கு இளமை என்ற வார்த்தையே ரொம்பப் பிடிக்கும். இவரோ இளமைக்குள் இளமை என்று இன்னும் அழகுகூட்டி எழுதியிருக்கிறார். பெண்களுக்கான அவள் விகடன் இதழில் டீன் ஏஜ் பெண்களுக்கான இணைப்பாக வருகிற ‘அவள் 16’ புத்தகத்துக்கு இது பொருத்தமான ஸ்லோகன். திருப்பூரைச் சேர்ந்த சுரேகா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.’’

கார்டன் டு கிச்சன் போட்டி (போட்டி எண் 6)

நடுவர்: சுற்றுச்சூழல் ஆய்வாளர் மற்றும் மண்புழு ஆராய்ச்சியாளர் சுல்தான் அகமது இஸ்மாயில்.

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

‘‘கேரள மாநிலத்தைச் சேர்ந்த லலிதகுமாரி, மணத்தக்காளி, பப்பாளி, ஓமவள்ளி, தூதுவளை, துளசி என மூலிகைச் செடிகள், ரோஜா, மல்லி பிச்சி என முதல் தளத்தில் மண் இல்லாத ஆர்கிட் முறையில் சுமார் 100 வகையான பூச்செடிகள், காற்றில் வளரக்கூடிய ‘ஏர் பிளான்ட்ஸ்’ என பசுமைக்குடில் அமைத்து அதற்குள் தொங்கவிட்டு வளர்த்து வருகிறார். பலவகையான பயனுள்ள செடி, கொடிகளை வளர்த்துவரும் இவர், இந்தப் பரிசுக்குத் தகுதியானவர்.’’

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். விரைவில் பரிசு உங்களை வந்துசேரும்!