Published:Updated:

எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல!

எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல!

‘என்னால் ஏற்றம்பெற்ற என் குடும்பம்’!

எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல!

‘என்னால் ஏற்றம்பெற்ற என் குடும்பம்’!

Published:Updated:
எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல!

அவள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப் பட்ட 18 பவுன் தங்கம் மெகா பரிசுப்

எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல!

போட்டிகளில், ‘என்னால் ஏற்றம்பெற்ற என் குடும்பம்’போட்டியில் (போட்டி எண் - 13) வெற்றிபெற்ற,காஞ்சிபுரத்தைச் சேர்ந்த உமா, தன் வாழ்க்கைப்பயணக் குறிப்புகளை இங்கே பகிர்கிறார்...

ருமபுரி மாவட்டம், பி.குறிஞ்சப்பட்டி கிராமம், என் சொந்த ஊர். அப்பாவுக்குக் கூலி வேலை. வீட்டில் ஐந்து பெண் பிள்ளைகள். நான்தான் மூத்தவள். 17 வயதில் திருமணம் நடந்தது. என் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டபோது எனக்கு 19 வயது. கையில் 11 மாத ஆண் குழந்தை, வயிற்றில் இரண்டு மாத சிசுவுடன் நிராதரவாக நின்றேன். கணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் எங்கள் வீட்டுக்கு வெளியே ஏதோ ஒன்று என்று அறிந்தாலும், அது என்னவென்று இதுவரை உறுதியாகத் தெரியவில்லை எனக்கு.

புகுந்த வீட்டில், ‘வயித்துல இருக்கிறது பையனா பொறந்தா, ரெண்டு பேரனுங்க பேர்லயும் சொத்தெழுதி வைக்கிறேன்’ என்றார்கள். பிறந்தது பெண் குழந்தை. அதற்காக வாங்கிய வசவுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. சொத்தும் இல்லை... பத்தும் இல்லை என்றாகிப் போனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல!

ஊரில் நிராதரவாக வசித்து வந்த என்னிடம், உறவுக்காரர்களில் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். அதை எதிர்த்த என்னைக் கொடுமைப்படுத்தினார். என்னுடைய 3 சவரன் நகை மற்றும் தாலி ஆகியவையும் பறிபோனது.

கொடுமை தாங்காமல் அப்பா வீட்டுக்குச் செல்வதாக நான் சொல்ல, ‘உங்க அப்பா உன் தங்கச்சிங்கள வளர்க்கவே திண்டாடுறார். இதுல உன்னையும், உன் குழந்தைகளையும் எப்படிக் காப்பாத்துவார்? உன்னை நடுத் தெருவுலதான் நிறுத்துவார். அப்புறம் நீயும் தற்கொலை செஞ்சுட்டு செத்துப்போக வேண்டியதுதான்’ என்றெல்லாம், இன்றளவும் நான் மறக்க இயலாத அளவுக்கு என்னை அவமானப்படுத்திப் பேசினார் இன்னொரு உறவுக்காரர்.

குழந்தைகளுடன் பிறந்தவீடு சென்றபோது, ‘உன் தங்கச்சிங்களைக் கரையேத்தவே என் கூலி போதாது. இதுல உனக்கும், ரெண்டு பிள்ளைங்களுக்கும் எப்படிச் சாப்பாடு போட முடியும்? நீ பிள்ளைகளை மாமனார் வீட்டுல விட்டுட்டு வா’ என்றார் அப்பா. வழக்கறிஞர் மூலமாக பேசி, 'குழந்தைகளைப் பார்க்க வரும்போது கட்டாயம் அனுமதிக்க வேண்டும்' என்கிற நிபந்தனையுடன் குழந்தைகளை மாமனார் வீட்டில் விட்டேன். ஆனால், நான் அவர்களைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம், ‘அவங்க வீட்ல இல்ல’ என்று சொல்லியே பார்க்கவிடாமல் செய்தனர். 

என் தந்தைக்குத் தெரிந்தவர் மூலமாக, சென்னையில் ஒரு சேவை இல்லத்தில் சேர்ந்து சுருக்கெழுத்து, தட்டச்சு பயின்றேன்.

தட்டச்சில் தேர்வானேன். ஒரு வருடம்தான் அங்கு தங்கியிருக்க முடியும் என்பதால், சொந்த ஊருக்குத்

எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல!

திரும்பி, நூற்பாலையில் வேலைசெய்துகொண்டே, சுருக்கெழுத்துப் பயின்றேன். நான்கு முறை தேர்வில் தோல்வி யடைந்து, ஐந்தாவது முறை வெற்றிபெற்றேன்.

இதற்கிடையே, ‘பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர்’ என்று சொல்லி, எனக்குத் தெரியாமலேயே என் பெண்ணை பெங்களூரில் அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டனர் புகுந்தவீட்டினர்.

இப்பிரச்னைகளுக்கு நடுவில் அரசுப் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வுக்குப் படித்து, 2005-ஆம் ஆண்டு குரூப்-IV தேர்வில் தேர்வாகி, சேலம், காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தேன்.

என் உழைப்பில், கடைசித் தங்கையைப் பெங்களூரில் டீச்சர் டிரெயினிங் படிக்கவைத்தேன். தருமபுரி மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில், மாமியாரிடம் இருக்கும் என் குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்குமாறு மனு கொடுத்தேன். ஆனால், என் பையன், ‘நான் உன்கூட வரமாட்டேன்’ என்றான். காவல் ஆய்வாளர் அவனை விசாரிக்க, ‘எங்கம்மா என்னை தெருவுல போட்டுட்டுப் போயிட்டாங்களாம். எங்க பாட்டி அவங்ககிட்ட போகக் கூடாதுனு சொல்லியிருக்காங்க’ என்றான். ‘இத்தனை அக்னிப் பரீட்சைகளைக் கடந்து நான் என் உயிரைக் காப்பாற்றி வைத்திருப்பது உங்களுக்காகத்தான்’ என்று மகனுக்கு புரியும்படிக் கூறி, அவனை என் அணைப்புக்குள் கொண்டுவந்தேன்.

மகளைப் பற்றி விசாரித்தபோது, ‘பெங்களூர்ல நாராயணபுரத்துல படிக்கிறா’ என்று மட்டும்தான் சொன்னார்கள். பெங்களூரில் படித்த என் தங்கை மூலமாக விசாரித்துச் சென்றடைந்தபோது, அநாதை இல்லத்தில் மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள் மகள். அவளைக் கண்டுபிடித்த பிறகு மகன், மகளுடன் என் புதிய வாழ்க்கை ஆரம்பித்தது; அர்த்தம் பெற்றது.

நான் பணியாற்றும் சேலம், காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்துக்கு, ஒரு விஷயமாக வந்தார், ஒரு காலத்தில் என்னைக் கேவலமாக பேசி கொடுமைப்படுத்திய அந்த உறவுக்காரர். அவரிடம், ‘என்னைத் தெரியுதா..?’ என்று என் கணவரின் பெயர் சொல்லி, ‘அவரோட மனைவி’ என்றேன். ‘நீங்க தந்த அவமானங்களை எல்லாம் தாண்டி, இன்னிக்கு நான் நல்ல நிலைமையில இருக்கேன். என் புள்ளைங்களை சந்தோஷமா பார்த்துக்கிறேன். எல்லாத்துக்கும் காரணம், என் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான்’ என்று நான் சொன்னபோது... அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார் அவர்.

உலகத்தில் எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல. தன்னைத் தானே ஆதரித்துக்கொள்ளும் வல்லமை படைத்தது, பெண் சக்தி. உங்கள் பலத்தை நீங்கள் உணருங்கள். தடைகள் தகர்த்து, வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள் தோழிகளே!

ஓவியம்:ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism