Published:Updated:

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

Published:Updated:
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

வாசகிகளுக்கு வணக்கம்!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

அவள் விகடனின் 18-ம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 18 பவுன் தங்கம் மெகா பரிசுப்போட்டிகள் அறிவிக்கப்பட்டன. ஏற்கெனவே 12 போட்டிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ‘தமிழோடு விளையாடு’, ‘அண்ணன்-தங்கை/அக்கா-தம்பி/அப்பா-மகள்', ‘மெஹந்தி’ போட்டிகளின் முடிவுகள் இங்கே!

போட்டி எண் 14

மெஹந்தி போட்டி 

நடுவர்: ஹரிணி ஸ்ரீ, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், மெஹந்தி கலைஞர், சென்னை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

‘‘வாசகிகள் பலரும் விதம்விதமான மெஹந்தி புகைப்படங்களை அனுப்பியிருந்தாலும், தூத்துக்குடியைச் சேர்ந்த நபிசத்துல் ஷஹானா போட்டிருக்கும் மெஹந்தி மிகவும் வித்தியாசப்பட்டிருந்தது. ஒவ்வொரு வளைவிலும் சிறிதும் நடுக்கம் இல்லாமல் வரைந்திருக்கிறார். சின்னச் சின்ன நுணுக்கங்களைக்கூட தெள்ளத் தெளிவாக காட்டியிருக்கிறார். கூடவே, எந்த இடத்தில் ஷேடோ வர வேண்டுமோ அந்த இடத்தில் சரியாக வந்திருக்கிறது. பியூட்டிஃபுல் ஷஹானா!’’

போட்டி எண்: 15

‘அண்ணன் - தங்கை/அக்கா-தம்பி/அப்பா-மகள்'

நடுவர்: நடிகர், நாடக கலைஞர் ஒய்.ஜி.மகேந்திரா, சென்னை

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

‘‘நம்மைவிட வயது குறைந்தவர்கள் நம்மைச் சரியாக வழிநடத்துவது ஆச்சர்யமானது, அழகானது. அதை சென்னையைச் சேர்ந்த ஜானகியின் தம்பி சரியாகச் செய்திருக்கிறார். குடும்ப வாழ்வில் அக்காவுக்குப் பிரச்னை எழும்போது வெறும் பாசம், அரவணைப்பு மட்டும் தராமல், ‘நீ படித்து வேலைக்கு சென்றால்தான் உன் பிள்ளைகளுக்கு எதிர்காலம்’ என தன் அக்காவுக்குப் புரியவைத்து, அவரை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்று விட்டிருப்பது பாராட்டுக்கு உரியது. அந்த அர்த்தமுள்ள பாசமும், அதை அவர் எழுதியிருந்த விதமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!’’

‘அக்கா - தம்பி’ போட்டியின் வெற்றியாளர், சென்னையைச் சேர்ந்த ஜானகி, தனக்கும் தன் தம்பி கதிரவனுக்குமான உறவை வரைந்திருந்த கடிதம் இங்கே...  

அப்போது நான் பி.எஸ்ஸி., இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். என்னைப் பெண் பார்த்துச் சென்றார்கள். ‘படிப்பு முடிக்கிறதுக்குள்ள எதுக்குக் கல்யாணம்?’ என்று அந்த ஏற்பாட்டில் என் தம்பிக்கு வருத்தம். ஆனால், எனக்கு அதெல்லாம் தோன்றவில்லை. திருமணம் என்ற பரவசமும் மகிழ்ச்சியும் மட்டுமே இருந்தன. மாப்பிள்ளையின் படிப்பு, சம்பளம், குடும்பச் சூழல் என்று எதையும் பற்றி சிந்திக்கத் தோன்றவில்லை. எந்த எதிர்காலத் திட்டமிடலும் இல்லாத வயது, மனது.

ஆனால், என்னை விட சிறியவனான, அப்போது டாக்டர் படிப்புப் படித்துக்கொண்டிருந்த என் தம்பி, மேலே சொன்ன அத்தனை அம்சங்களையும் பற்றிச் சொல்லி என்னிடம் பேசியபோது, எனக்காகப் பேசியபோது, வியந்துபோனேன். பெற்றோர் ஏற்பாட்டில் நல்லபடியாக திருமணம் முடிந்தது. திருமணத்தில் எடுத்த புகைப்படங்களில், என் தம்பியோடு சேர்ந்து நின்று எடுத்த புகைப்படங்களில் மட்டும்தான் அதிகம் சிரித்திருக்கிறேன் என்று, பல வருடங்கள் கழித்து உணர்ந்தேன்.

திருமணம் முடிந்ததும் மீண்டும் விடுதிக்குச் சென்று படிப்பை முடித்தேன்.

ஆரம்ப நாட்களில் திருமண வாழ்க்கையில் இருந்த இனிமையைச் சுவைத்து திளைத்த எனக்கு, காலம் கழிய அது கசக்கவும் செய்யும் என்று தெரியவில்லை. ஒரு நாள் கசந்தது. உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொள்ளப் போகும் அளவுக்குக் கசந்தது.

அந்த நடு இரவில், என் தம்பி அவன் நண்பன் ஒருவனோடு விரைந்து என் வீட்டுக்கு வந்தான். அவனைக் கண்டதும், என் அழுகை கட்டுடைத்தது. என் கணவர் உட்பட, உடன் இருந்த அனைவரிடமும் கோபமாகவும், அதே சமயம் சரியாகவும் பேசிய பின், என்னைத் தனியே மாடிக்கு அழைத்துச் சென்று நடந்தவை பற்றிக் கேட்டான். அனைத்தையும் கேட்ட பிறகு அவன் என்னிடம் கூறிய வார்த்தைகள், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. என் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதவை. மறக்கக் கூடாதவை. என் வாழ்க்கை திசை திரும்பியதற்கு முக்கியக் காரணமானவை. இன்றுவரை என் தூக்கத்தை அவனது வார்த்தைகளை நினைக்காமல் வரவழைத்ததில்லை. வரவேற்றதும் இல்லை.

அப்படி என்ன சொன்னான் என் தம்பி?!

‘நீ படிச்சு வேலைக்குப் போனாதான் உன் பிள்ளைக ளுக்கு எதிர்காலம். யாரையும் நம்பாதே. யாரைப் பத்தியும் கவலைப்படாதே. எல்லாமும், எல்லாரும் உன்னைத் தேடி வருவாங்க’ என்று என் தம்பி என்னை தைரியப்படுத்தியபோது, அவன் எனக்குக் கடவுளுக்கும் மேலாய்த் தெரிந்தான். என் குழப்பங்களுக்கு நடுவே விஸ்வரூப தரிசனம் வந்தான். மடிப்பிச்சை ஏந்தி நின்ற பக்தைக்கு மடிகொள்ளாது தானம் தந்த பரந்தாமனானான். தாயாய், தந்தையாய், தமையனாய் எல்லாமும் ஆகி நின்றான்.

நெகிழ்ச்சி மட்டுமல்ல, ஏதோ ஒரு தெளிவும் ஏற்பட்டது எனக்கு. அவன் கூறிய வார்த்தைகள் சாதாரண மனநிலையில் இருப்பவர்களுக்கு பெரிதாகத் தெரியாது. ஆனால், அன்று நான் இருந்த மனநிலையில், உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்த எனக்கு, எல்லா கோபமும், தூக்கமும், அழுகையும், ஆத்திரமும் மேலோங்கி நின்றிருந்த எனக்கு, அவனது வார்த்தைகள் சிந்திக்கும் சக்தியைத் தந்தன. என்னால் வாழ்வை தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்ற தெம்பைக் கொடுத்தன. அதற்கு ஆயுதம் அவன் சொன்ன படிப்புதான் என்று புரியவைத்தன.

கல்வி மட்டுமே சுயகௌரவம் கொடுக்கும் என, என்னைச் சொந்தக் காலில் நிற்கச் சொன்னதை விடச் சிறந்ததாக உடன்பிறந்தவன் என்ன சீர் கொடுத்துவிட முடியும்? பணம், நகை, புடவை, சாமான் எல்லாம் இரண்டாம், மூன்றாம் பட்சம்தான். படித்தேன். அவன் சொன்னதால் வீம்போடு படித்தேன். பல இன்னல்களுக்கு நடுவே படித்தேன். எம்.பி.ஏ படித்தேன். எம்.ஃபில் படித்தேன். பெற்றோர் பலமாக இருக்க, ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன்... டாக்டர் பட்டத்துக்கு.

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்று சொந்தக்காலில் நிற்கிறேன். அவன் கொடுத்த தைரியத்தில் நிற்கப்பழகியவைதான் இந்தக் கால்கள். என் முடிவுகள் ஏற்கப்பட்டன. பிள்ளைகள் நகரில் பெரிய பள்ளியில் படிக்கிறார்கள். என் சம்பாத்தியம் கொடுக்கிற தெம்பில் என் கணவர் வீடு வாங்கினார். கிராமத்தில் பெரிய வீடு கட்டினோம். என் பிள்ளைகளுக்கு என் தம்பியைப் பற்றிச் சொல்லிதான் சோறூட்டுவேன். அவர்களுக்கு மாமாதான் உதாரணம். அவன்போல ஆக வேண்டும் என்பதுதான் கனவு.

என் தம்பி பல வருடங்களாக வெளிநாட்டில் வசிக்கிறான். பணி பரபரப்பால் நானும் அவனும் பேசிக்கொள்வதுகூட குறைவுதான். ஆனாலும், தூரம், தொலைவு, வார்த்தைகளை எல்லாம் மீறிய, புரிதலும் பிரியமுமான அருமையான உறவு... எங்களின் அக்கா - தம்பி உறவு.

நான் கடவுளர்களை வேண்டுவது எல்லாம் ஒன்றை மட்டும்தான். அடுத்த ஜென்மம் உறுதி என்றால், அவனுக்கு நான் மகளாய்ப் பிறந்து, அவன் கைபிடித்து நடைபழக வேண்டும்.

போட்டி எண் 16

தமிழோடு விளையாடு

நடுவர்: பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, சென்னை

மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

‘‘விவேகானந்தரின் வாழ்க்கையை சரியாகத் தொகுத்திருந்தார் சுஜாதா. மேலும் தமிழ் சொற்களுக்கான நடப்புச்சொல், பாரதியின் பாட்டினையும் சரியாக எழுதியதோடு மட்டும் இல்லாமல், ‘என்ன பிறவி எடுப்பீர்கள்?’ என்ற வினாவுக்கு ‘என் தாய்க்கு மீண்டும் மகளாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக மனிதப்பிறவி எடுப்பேன்’ என்று அன்பில் நனைத்து பதில் எழுதியிருந்தார். சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த சுஜாதாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!’’

படங்கள்:ஏ.சிதம்பரம், ப.சரவணகுமார், மீ.நிவேதன்