Published:Updated:

புயலாய் புறப்படு பெண்ணே..!

புயலாய் புறப்படு பெண்ணே..!
பிரீமியம் ஸ்டோரி
புயலாய் புறப்படு பெண்ணே..!

புயலாய் புறப்படு பெண்ணே..!

புயலாய் புறப்படு பெண்ணே..!

புயலாய் புறப்படு பெண்ணே..!

Published:Updated:
புயலாய் புறப்படு பெண்ணே..!
பிரீமியம் ஸ்டோரி
புயலாய் புறப்படு பெண்ணே..!

பிரேசிலில் கோலாகலமாகத் தொடங்கி விட்டது, ஒலிம்பிக் போட்டிகள். பி.டி உஷாவுக்குப் பிறகு, 36 வருடங்கள் கழித்து ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கும் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், டுடீ சந்த் (Dutee Chand).

புயலாய் புறப்படு பெண்ணே..!

ஏழ்மையான குடும்பம்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த டுடீ சந்த், 20 வயது இளம் பெண். நெசவாளர் குடும்பம். ஏழ்மையை வெல்வதற்காக டுடீ சந்த்தின் அக்கா சரஸ்வதி சந்த் வேகமாக ஓடத் தொடங்கினார். அவர் தேசியப் போட்டிகளில் பெற்ற சில பதக்கங்களால், அவருக்கு அரசு வேலை கிடைத்தது. அக்காவைப் பார்த்து ஓடத் தொடங்கினார் டுடீ. 2012-ம் ஆண்டு தேசிய தடகள போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், 100 மீட்டர் பந்தய தூரத்தை 11.8 நொடிகளில் ஓடி தங்கம் வென்றார். அன்றிலிருந்துதான், இந்திய தடகள நட்சத்திர வீராங்கனைகள் பட்டியலில் டுடீயையும் சேர்த்து பத்திரிகைகள் பேசத் தொடங்கின.

சாதனைக்குப் பரிசு... சோதனை!

டுடீயின் சாதனைகள் தொடர்ந்தபோது, சோதனை தொடங்கியது. 2014 காமென்வெல்த் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றிருந்த டுடீ உற்சாகமாக ஸ்காட்லாந்துக்குப் பறக்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, இந்திய தடகள சம்மேளனத்திலிருந்து, ‘டுடீ, உனக்கு ஹைபர்ஆன்ட்ரோஜெனிஸம்'
(Hyperandrogensim) இருக்கிறது. எனவே, காமென்வெல்த் போட்டியில் கலந்துகொள்ள முடியாது’ என்று செய்தி சொன்னார்கள். இனி வரும் சர்வதேச போட்டிகளிலும் பெண் என்ற தகுதியில் அவர் கலந்துகொள்ள முடியாது என்றும் சொன்னார்கள். காமென்வெல்த் போகட்டும் என்று, நீதிமன்றப் படியேறினார். இறுதியாக ஜூலை 2015-ல் `கோர்ட் ஆஃப் ஆர்பிட்ரேஷன் ஃபார் ஸ்போர்ட்ஸ்' (Court of Arbitration for Sports), டுடீயின் மீதான தடையை விலக்கி தீர்ப்பளித்தது, அவரின் ஒரு வருடப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தடைப்பட்ட பயிற்சி!

பொதுவாக சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராகும் வீரர், வீராங்கனைகளை ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, தன் விடுதிக்கு அழைத்து தரமான உணவு, விளையாட்டு சாதனங்கள், தகுந்த மருத்துவம், மசாஜ் என்று சகல வசதிகளையும் வழங்கி தயார்படுத்தும். ஆனால், அங்கிருந்து டுடீக்கு வரவேண்டிய அழைப்பு வரவில்லை. ‘ஆணை வரவில்லை’ என்று காரணம் சொன்னார்கள். டுடீயின் கோச் ரமேஷ், பாட்மின்டன் சாம்பியன் சாய்னா நேவால் பயிற்சி பெறும் கோபிசந்த்திடம் டுடீயை ஓப்படைக்க, சாய்னா பயிற்சிபெற்ற அதே களத்தில் டுடீ தன் கடுமையான பயிற்சிகளைத் தொடர்ந்தார்.

உடைந்தது... தேசிய சாதனை!

இந்தியாவின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தய சாதனை நேரம், 11.38 நொடி. 2000-ம் ஆண்டு ரச்சிதா மிஸ்ட்ரி செய்த இந்த சாதனை, யாரும் நெருங்காமலேயே இருந்தது. இதற்கிடையே தீர்ப்புப் பிறகு, டுடீயின் பயிற்சி இரண்டு மடங்காகியிருந்தது. ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம் மட்டுமே சிந்தனையாகவும் செயலாகவும் இருந்தது.

2016-ம் ஆண்டு ஃபெடரேஷன் கப் ஆஃப் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் டுடீ 100 மீட்டர் தூரத்தை 11.33 நொடிகளில் கடந்து ரச்சிதாவின் சாதனையை முறியடித்து,  தலைநிமிர, நம்பிக்கை நட்சத்திரப் பட்டியலில் டுடீக்கு தனி இடம் கிடைத்தது.

மறுநாள். ‘சாதனையை முறியடித்தாய்  சரி, ஒலிம்பிக்குக்கு தகுதி பெறலயே’ என்று டுடீயின் கோச்கள் வருத்தப்பட்டார்கள். ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான தகுதி, 11.32 நொடிகள். 0.01 நொடியில் தவறவிட்ட வாய்ப்பு அது. ஓட்டப் பந்தயத்தில் 0.01 நொடி  வேகமாக ஓட வேண்டும் என்றால், பல மாத தீவிர பயிற்சி தேவை.

அடுத்த நாள், டுடீ கஜகஸ்தானில் 16-வது சர்வதேச ஜி.கொஸநோவ் நினைவு அல்மாடி போட்டியில் ஓடினார். ‘ஆல் அவுட் ரேஸ்’ என்பார்கள். ஒரு ஓட்டக்காரர் தன் உடலில் உள்ள ஒவ்வொரு தசை, எலும்பு, சுவாசம் என்று தன் முழு பலத்தையும் பயன்படுத்தி ஓடினால், சாத்தியமில்லாத வேகத்தில் ஓடலாம். அப்படி ஒரு ஓட்டத்தைதான் அன்று டுடீ ஓடினார். 100 மீட்டர் தூரத்தைக் கடந்த பிறகு, ‘டுடீ... நீ 100 மீட்டர் தூரத்தை 11.24 நொடியில் ஓடி இருக்கிறாய்' என்றது கடிகாரம். கோச்கள் குதூகலத்தில் கூத்தாடினர்.

அன்று உயிர்கொடுத்து டுடீ ஓடிய ஓட்டத்துக்குதான் இன்று இந்தியாவே டுடீயை துதி பாடிக்கொண்டிருக்கிறது. ஆம்... 36 வருடங்களுக்குப் பிறகு இன்னொரு எக்ஸ்பிரஸ் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

உன் பாதங்கள் வெற்றி காண, பாரதத்தின் வாழ்த்துகள் டுடீ!

 மு.சா.கௌதமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டுடீக்கு சாந்தியின் வாழ்த்துகள்!

புயலாய் புறப்படு பெண்ணே..!

சாந்தியை மறக்கமுடியுமா?! புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீராங்கனை.

2006-ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர். அதன் பிறகு பாலினப் பிரச்னை காரணமாக சாந்தியின் தோஹா பதக்கம் பறிக்கப்பட்டது. தன் வாழ்க்கை சிலரின் அலட்சியத்தால் தடைப்பட்டதைபோல டுடீயின் வாழ்க்கையும் தடைப்படக்கூடாது என்று அரசு அதிகாரிகள், கோச்கள் மற்றும் மீடியாக்களிடம் தொடர்ந்து பேசி வந்தார் சாந்தி. ‘வாழ்த்துகள் டுடீ!’ என்று இப்போது மகிழ்ந்திருக்கிறார், இந்த வீரத் தமிழச்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism