Published:Updated:

மெகா பரிசுப் போட்டி!

மெகா பரிசுப் போட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
மெகா பரிசுப் போட்டி!

மெகா பரிசுப் போட்டி!

மெகா பரிசுப் போட்டி!
மெகா பரிசுப் போட்டி!

ஹாய் வாசகிகளே!

அவள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி வெளிவந்த 18 விதமான போட்டிகளில் ஒன்றான 1.12.15 தேதியிட்ட அவள் விகடன் இதழில் வந்த போட்டி எண் 8

வீடியோ எடுங்க... பரிசை வெல்லுங்க (குறும்படப் போட்டி )


தண்ணீர், மின்சாரம், சாப்பாடு இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, ‘இவற்றை வீணாக்கக் கூடாது ‘எனும் கருத்தை உணர்த்தும் வகையில் மூன்று நிமிடத்துக்குள்ளான குறும்படமாக எடுத்து அனுப்புமாறு அறிவித்திருந்தோம். வாசகிகளிடம் இருந்து வீடியோக்கள் வந்தன என்றாலும் போதுமான தரத்தில் அவை இல்லை. அதனால் போட்டி எண் எட்டுக்கான மாற்று போட்டியாக ‘குறுக்கெழுத்துப் போட்டி ‘‘படம் பார்த்து பெயர் சொல்லு’ மற்றும் ‘ஸ்லோகன் போட்டி’ பற்றிய விவரங்களை இங்கு கொடுத்துள்ளோம். போட்டியில் பங்கெடுத்து வெற்றிவாகை சூடுபவருக்கு பரிசாக ஒரு பவுன் தங்கம் காத்திருக்கிறது!

1. குறுக்கெழுத்துப் போட்டி :


கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளுக்கான விடையை சரியாக கட்டங்களில் நிரப்புங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மெகா பரிசுப் போட்டி!

இடமிருந்து வலம்

1.    பாரதப் பிரதமர் - பிரதமரின் மகள் - பிரதமரின் தாய் என மூன்று பெருமைகள் கண்டவர் (7)

2.    ஐரோப்பியமருத்துவத்தில் முதலாவதாகப் பட்டம் பெற்ற இரு இந்திய பெண்களில் ஒருவர் (6)

3.    இந்திய உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதியரசர் (6) 

4.    பேண்டிட் குயின் என்று அழைக்கப்பட்டவர் பின்னாளில், இந்திய அரசியல்வாதியானார் (5)

5.    மூன்று முறைகளுக்கு மேல் உத்தரப்பிரதேசத்தின் முதல்வரான பெண்மணி (4)

6.    காமராஜர் ஆட்சியின் போது (1958-ல்) தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத்  தேர்ந்தெடுக்கப் பட்ட கொடுமுடி கோகிலம் (9)

வலமிருந்து இடம்

7.    நோபல் பரிசு பெற்ற அன்னை, இவர் பெயரில் பல்கலைக்கழகம் உள்ளது (6)

8.    உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சி யாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியாவின் வீராங்கனை (4)  

9.    இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் (6)

10.    துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளர் (7) 

மேலிருந்து கீழ்


11.    உலகின் முதல் பெண் பிரதமர் (புதிரில் சிறிமாவோ இல்லை) (8)

12.    உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்திய பெருமைக்குரியவர் (9)

13.    தமிழக அம்மாவைத் தெரியும். வங்காள அக்கா (தீதி) யார் தெரியுமா (3)

கீழிருந்து மேல்

14.    இந்தியக்காவல் துறையின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி (5)  

15.    சமீபத்தில் கின்னஸில் இடம்பிடித்த     இசைக்குயில் (3) இனிஷியல் இல்லாமல்  

16.    இந்தியாவின் நைட்டிங்கேல் (7)

17.    இந்தியாவின் முதல் பெண் விமானி - ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியவர் (7) 

2. படம் பார்த்து பெயர் சொல்லு:


கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களை இணைத்தால் சீரியல் தலைப்பு வரும். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

மெகா பரிசுப் போட்டி!

3.ஸ்லோகன் போட்டி

மேலே உள்ள 4 வட்டமிடப்பட்டுள்ள எழுத்துக்களை சேகரித்து, ஒரு வார்த்தையை உருவாக்கி, அதைக்கொண்டு இரண்டு வரிகளுக்கு மிகாமல் ஸ்லோகன் எழுதி அனுப்பவும்.

போட்டிக்கான விடையை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : aval@vikatan.com

போட்டிக்கான விடையை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி,
அவள் விகடன், 
757, அண்ணா சாலை,
சென்னை - 600002

அனுப்பவேண்டிய கடைசி நாள்: 31.08.2016

போட்டிக்கான விதிமுறைகள்
இது அதிர்ஷ்டப் போட்டியல்ல... திறமையாளர்களுக்கே பரிசுகள் வழங்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாக வேறு கடிதப் போக்குவரத்துத் தேவையில்லை. படைப்புகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே, நகல் எடுத்துக்கொண்டு அனுப்பிவைக்கவும்.