பொது அறிவு
FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

வணக்கம்

வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
வணக்கம்

படம்: சி.சுரேஷ்பாபு

முதல்ல உங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி! நம்ம சுட்டி விகடனுக்கு வயசு 18.

வணக்கம்

நம்ம எல்லோருக்குமே வயசுல பெரிய நண்பர்கள் நிச்சயம் இருப்பாங்க; அவங்களோடு நாமும் சரிக்குச் சரியா சிரிச்சு விளையாடுவோம், செல்லச் சண்டைகள் போடுவோம், மனம் திறந்து பேசுவோம்... இல்லையா?! அவங்களும் நம்மை சின்னப் பசங்கதானேன்னு நினைக்காம, நாம சொல்லும் யோசனைகளைக் கேட்டுக்குவாங்க. அதைச் செயல்படுத்தி நம்மை மகிழ்விப்பாங்க. இதனால என்னாகும்... நமக்கும் அவங்களை ரொம்பப் பிடிச்சுடும். அவங்க நம்ம மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்களா ஆயிடுவாங்க. நம்ம சுட்டி விகடன்கூட அப்படி ஒரு நல்ல நண்பனாதான் உங்களோடு எப்போதும் இருக்க விரும்புகிறான்.

புதுப்புது ஐடியாக்கள், ஆலோசனைகள் என உங்க கிட்டேருந்துதான் நாங்க நிறையக் கத்துக்கறோம். அதுதான் எங்களை உற்சாகமா செயல்படவைக்குது. 

வணக்கம்

உலகமே இன்னிக்கு டிஜிட்டலா மாறிடுச்சு. கையடக்க செல்போனில் எல்லாமே கிடைக்குது. ஆனாலும், உங்க கையில் சுட்டி விகடன் தவழ்வதற்குக் காரணம், புத்தகம் வாசிப்பதில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடுதான்; ஆர்வம்தான்! காரணம், காட்சி ஊடகங்கள் எவ்வளவுதான் வந்தாலும், புத்தகமா படிக்கும்போதுதான் நம்முடைய கற்பனா சக்தி அபரிமிதமா வெளிப்படும் என்பதை நீங்க சரியா புரிஞ்சுவெச்சிருக்கீங்க. உங்க நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதத்தில், உங்கள் கற்பனைத் திறன் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில், புதிய புதிய விஷயங்களை சுவாரஸ்யம் குறையாம, தொடர்ந்து அளிக்கும் சிநேகிதனாக சுட்டி விகடன் எப்போதும் இருக்கும். இது உறுதி!

 - ஆசிரியர்