Published:Updated:

இந்தப் போட்டி போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா ?

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து மோ.கிஷோர்குமார்

இந்தப் போட்டி போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா ?

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து மோ.கிஷோர்குமார்

Published:Updated:
##~##

மதுரை மக்களுக்கு பிப்ரவரியில் ஒரு போனஸ் திருவிழா... 'ரவுண்ட் டேபிள் 14’ மற்றும் 'லேடர் நிறுவனம்' இணைந்து நடத்திய 'சுவை தர்பார் ஃபுட் ஃபெஸ்டிவல் 2012’. மதுரை தமுக்கம் மைதானத்தில் பிப்ரவரி 17, 18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவின் ஹைலைட்டாக, அதில் இடம் பெற்றிருந்த 'அவள் விகடன்' அரங்கம்... விளையாட்டுகள், பரிசுகள், மகிழ்ச்சிகள் என தோழிகளின் உற்சாகத்தால் சிறப்புப் பெற்றது.

பல்லாங்குழி, தாயம், பாண்டி என கிராமத்து விளையாட்டுகளும், ஜக்லர், மெகந்தி மஜா, மின்னல் எஸ்.எம்.எஸ். என இன்றைய தலை முறைப் பெண்களுக்கான விளையாட்டுகளும், கூடவே எல்லா தரப்பினரும் பங்கேற்கும் வகையில் பூக்கட்டுதல், வளையல் அடுக்குதல், சாப் பாட்டுக் கவிதை என மூன்று நாட்களும் நாம் நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் வாசகிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இந்தப் போட்டி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா..?’ என்பதுபோல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுமதி ராஜகோபால், ஆன் த ஸ்பாட் போட்டிகளையும் அறிவிக்க, ஜிலீர் உற்சாகம் தோழிகளிடம்! பார்த்த பொருட்களை நினைவு வைத்து எழுதும் மெமரி கேம், ஊசியில் பால் எடுத்துப் போடும் பால் பிக்கிங் கேம் என போட்டிகளும் பரிசுகளும் வரிசைகட்ட, எதிர்பாராத அந்த த்ரில்லில் சந்தோஷ திக்குமுக்காடினர் தோழிகள்.

இந்தப் போட்டி போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா ?

வளையல் அடுக்குதல் போட்டியில் இரண்டு சகோதரிகளுக்கு இடையே போட்டி முற்ற, இறுதியாக தங்கை உஷாராணி வென்றார். 'என் தங்கைக்கு நான்தான் பரிசு கொடுப்பேன்...’ என்று கேட்டு வாங்கிப் பரிசளித்தார் அக்கா சாந்தினி. 60 வயதான விஜயலட்சுமி, துள்ளலோடு பாண்டி ஆட்டத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க, பயங்கர அப்ளாஸ். இன்னொரு பக்கம், செஃப் தாமுவின் தலைமையில் கின்னஸ் சாதனைக்காக 60 அடி தோசை சுடப்பட்டது, நிகழ்ச்சியின் ஹைலைட்!

''ரொம்ப தேங்க்ஸுங்க. நீங்க நடத்தின விளையாட்டுகள் எல்லாம் எனக்கு அஞ்சு வயசைக் குறைய வெச்ச மாதிரி உற்சாகம் தந்தது. கை நிறையப் பரிசுகள் எடுத்துட்டு வீட்டுக்குப் போறேன். அவருக்கு சர்ப்ரைஸா இருக்கப் போகுது!'' என்று ஆட்டோ பிடித்தார் ஒரு தோழி !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism