Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:

ஊருக்குத் திருப்பித் தருவோம்!

ஹலோ வாசகர்களே..!

ண்மைக் காலமாக செய்தித்தாள்களைப் புரட்டினாலே, சொத்துத் தகராறு தொடர்பான கொலைகள் அடிக்கடி நிகழ்வதைப் பார்க்கிறோம். முன்பெல்லாம் சொத்துப் பிரிப்பு என்பது நான்கு சுவர்களுக்குள் சுமூகமாக நடந்து முடியும். இன்றோ தங்களுக்குக் கிடைக்கும் பங்கில் குந்துமணி அளவுகூட குறையக் கூடாது என்று நினைப்பதன் விளைவுதான் இந்த கொலைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணத்திற்கான பேராசைதான் இந்த கொலைகளுக்குக் காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆயுள் முழுக்க கஷ்டப்பட்டு பணம் சேர்க்கும் பிஸினஸ்மேன்கள் தாங்கள் சேர்த்த சொத்துக்களை எல்லாம் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே தர நினைக்க, கிடைப்பதை வைத்து சந்தோஷப்பட விரும்பாத வாரிசுகள், இன்னும் வேண்டும் என்று சண்டை போட்டு சாகிறார்கள்.

ஆனால், வெளிநாடுகளில் இந்த போக்கு இல்லை. அங்குள்ள பிஸினஸ்மேன்கள் தாங்கள் சம்பாதித்ததை தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே தர நினைக்காமல், தங்களை ஆளாக்கிய சமூகத்திற்கு திரும்பத் தருகிறார்கள். தங்கள் ஊரில் பள்ளிக்கூடங்களைக் கட்டுகிறார்கள். மருத்துவமனைகளை அமைக்கிறார்கள். மக்களுக்குப் பயன்படுகிற வழியில் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி, கடையனையும் கடைத்தேற்ற பாடுபடுகிறார்கள்.

இந்த சிந்தனை நம்மவர்களுக்கும் வரவேண்டும். சம்பாதித்தப் பணத்தையும், சேர்த்த சொத்துகளையும் தம் வாரிசுகளுக்கே தர நினைக்காமல், அந்தந்த பகுதி மக்களின் வளர்ச்சிக்கு செலவழிக்கலாம். இன்னும்கூட மரத்தடியில் நடக்கும் பள்ளிக்கூடங்கள் நம்மூரில் எத்தனையோ. மருத்துவமனையில் தரையில்  படுத்துக் கிடக்கும் நோயாளிகள் பலர். காலைப் பதம் பார்க்கும் கற்சாலைகள் பலப்பல! இதை எல்லாம் சரி செய்வது அரசின் வேலை என்று நினைக்காமல், தம்மை உருவாக்கிய ஊருக்கே திரும்பத் தந்தால், நிச்சயம் சொத்துக் கொலைகளும் நடக்காது! நம் நாடும் முன்னேறும்!

- ஆசிரியர்.

ஹலோ வாசகர்களே..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism