Published:Updated:

மார்க்கெட்டிங் பயிற்சி தருவீர்களா ?

தொகுப்பு: சி.சரவணன்,படம்: ஜெ.வேங்கடராஜ்.

மார்க்கெட்டிங் பயிற்சி தருவீர்களா ?

தொகுப்பு: சி.சரவணன்,படம்: ஜெ.வேங்கடராஜ்.

Published:Updated:
##~##

?உணவுப் பொருட்களை பாக்கெட் மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ய தனியாக உரிமம் ஏதும் வாங்க வேண்டுமா?

 - சகாயமேரி, கல்லிடைக்குறிச்சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''ஃபுட் புராடக்ட் ஆர்டர் என்கிற எஃப்.பி.ஓ. உரிமம் தனியாக வாங்க வேண்டும். இதற்கான அலுவலகம் சென்னையில் கீழ்க்கண்ட முகவரியில் இயங்கி வருகிறது. அவர்களை தொடர்புகொண்டால் கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.  

Food Safety and Standards Authority of India C-1-D, Rajaji Bhawan, Besant Nagar, Chennai-600 090 Telefax- 044 - 2446 3569

?தொழிலில் லாப வரம்பை எப்படி நிர்ணயிப்பது? இதற்கு என தனியாக ஏதாவது ஃபார்முலா இருக்கிறதா?

- விவேகானந்தன், கன்னியாகுமரி.

''ஒவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு விதமான லாப வரம்பு இருக்கிறது. யாருமே உற்பத்தி செய்யாத ஒரு பொருளை ஒருவர் உற்பத்தி செய்கிறார் என்றால் அதிக லாபம் வைக்க முடியும். மேலும், மூலப்பொருட்கள் விலை குறைவாக இருக்கும்பட்சத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக, போட்டி நிறுவனங்களின் நிலவரம் அறிந்து அதற்கு ஏற்ப லாப வரம்பை நிர்ணயித்துக்கொள்வது நல்லது. மேலும், நீங்கள் செய்த முதலீடு, வாங்கிய கடன், அதற்கான வட்டி, இதர செலவுகளின் அடிப்படையில் நியாயமான லாப வரம்பை நிர்ணயித்துக்கொள்ளலாம்.''

மார்க்கெட்டிங் பயிற்சி தருவீர்களா ?

?நான் அலுமினியப் பாத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன். இதற்கு மூலப்பொருட்கள் மற்றும் பாத்திரம் தயாரிப்பதற்கான கருவிகள் எங்கே கிடைக்கும்?

- கிருஷ்ணன், நாகர்கோவில்.

''அலுமினிய பாத்திரங்களுக்கான மூலப் பொருட்கள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்.

* டால்கோ அலுமினியம் கம்பெனி,

2, உஸ்வால் ஆயில் மில் காம்பவுண்ட், 212,

சி - பி சாலை, கொருக்குப்பேட்டை, சென்னை - 600 021. போன்: 044 - 2520 0061 / 62

* பி.சி. மாபானி அண்ட் கோ, 160, லிங்கி செட்டி தெரு, சென்னை - 600 001, போன்: 044 - 2534 1493

அலுமினியப் பாத்திரங்கள் தயாரிக்க கீழ்க்கண்ட இயந்திரங்கள் தேவை:

1. ரோலிங் மெஷின், 2. ஸ்பின்னிங் லேத்,

3. அச்சு இயந்திரம், 4. சர்க்குலர் கட்டிங்.

மார்க்கெட்டிங் பயிற்சி தருவீர்களா ?

மேற்கண்ட இயந்திரங்கள் கிடைக்கும் இடங்கள்...

* ஓரியன்ட் மெஷின் டூல்ஸ்,

218, லிங்கி செட்டி தெரு, சென்னை - 1.

போன்: 044 - 2521 6304

* மெஷின் டூல்ஸ் டிரேடர்ஸ் (மெட்ராஸ்),

91 ஆர்மீனியன் தெரு, சென்னை.

போன்: 044 - 2521 1711

இவை தவிர, பல நிறுவனங்கள் சென்னை லிங்கி செட்டி தெருவில் உள்ளன. அங்கு சென்று விலை, தரம் போன்றவற்றை விசாரித்து வாங்கிக்கொள்ளலாம்.

?நான் சிறு தொழில் தொடங்கினால் அதற்கான மார்க்கெட்டிங் செய்ய உங்களின் இட்காட் அமைப்பு பயிற்சி ஏதாவது அளிக்குமா? கூடவே பொருட்களை சந்தைப்படுத்த உதவி செய்யுமா?''

- வித்யா கணேஷ், காரைக்குடி.

''எங்களின் இட்காட் நிறுவனம் மார்க்கெட்டிங் பயிற்சி எதுவும் அளிப்பதில்லை. ஆனால், மார்க்கெட்டிங் சம்பந்தமான தகவல்களை அளிக்கிறது. எந்தப் பொருட்களுக்கு என்ன தேவை இருக்கிறது, அதற்கான வாடிக்கையாளர்கள் யார் என்கிற விவரம், தொழிலில் தற்போதுள்ள போட்டி நிலை உள்ளிட்ட தகவல்களை எங்களின் அமைப்பிடமிருந்து பெற்று தொழிலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.''

?தற்போது நான் செய்துவரும் தொழிலை மேம்படுத்த வங்கிகள் அல்லது தொழில் அமைப்புகளிடமிருந்து கடன் கிடைக்குமா?

- விமலா குமார், ஆரணி.

''தற்போது செய்துவரும் தொழில்களுக்கு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) போன்றவை கடன் வழங்குகிறது. பொதுவாக, தொழில் திட்ட மதிப்பில் சுமார் 75% வரை கடன் கிடைக்கும். டிக் அமைப்பின் திருவண்ணாமலை கள அலுவலரை 94450 23476 என்கிற எண்ணில் அணுகவும்.

முகவரி: 4ஏ, லட்சுமிபுரம், பை-பாஸ் சாலை, காந்திநகர், திருவண்ணாமலை.''  

மார்க்கெட்டிங் பயிற்சி தருவீர்களா ?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism