Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

முதியவர்களையாவது விட்டுவிடுங்களேன் !

ஹலோ வாசகர்களே..!

முதியவர்களையாவது விட்டுவிடுங்களேன் !

Published:Updated:
##~##

சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய ஓய்வுக்கால வருமானத்துக்காக வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தால், அவர்களுக்குக் கூடுதலாக வட்டி அளிப்பதைத் தவிர்த்து, மற்றவர்களுக்குத் தரப்படும் வட்டி விகிதத்தையே தந்தால் போதும் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.  

டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறைந்தால்தான் கடன்களுக்கான வட்டி குறையும்; அப்போது நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது அமைச்சரின் கணக்கு. அதற்காக பெரியவர்களின் தலையில் மிளகாய் அரைக்க வேண்டுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வயதான பெரியவர்கள் தங்கள் எதிர்காலத்துக்கென பெரிதும் நம்பி இருப்பது சிறுக சிறுகச் சேமித்துவைத்த கொஞ்சநஞ்ச பணத்தைதான். அந்தப் பணத்தை, அசலை இழக்காமல் முதலீடு செய்ய, அவர்கள் விரும்பித் தேடிச் செல்வது ஃபிக்ஸட் டெபாசிட்களையே. அப்படிப்பட்ட சேமிப்புக்கு வட்டி விகிதத்தைக் குறைப்பது எந்த வகையில் நியாயம்?

ஹலோ வாசகர்களே..!

இப்படிச் செய்வதால், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யும் சீனியர் சிட்டிசன்கள், வேறு முதலீடுகளுக்குப் போய்விடமாட்டார்களா? அதுவும் முக்கியமாக தங்கம் சார்ந்த முதலீடுகளுக்குப் போனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாகி விடுமே! ஏற்கெனவே டெபாசிட் கிடைக்காமல் தவிக்கும் வங்கிகள், இதையும் இழந்தால் கடன் தருவதற்கான பணத்திற்கு எங்கே போகும்? தனிநபர் சேமிப்பு 34 சதவிகிதத்திலிருந்து

30.8 சதவிகிதமாக குறைந்திருக்கும் இந்த நேரத்தில், இப்படிப்பட்ட ஒரு விபரீத முடிவை எடுத்தால், நாம் ஆபத்து நிறைந்த அயல்நாட்டு முதலீட்டுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடுமே!

எல்லாவற்றுக்கும் மேலாக, நிதி அமைச்சரே நன்றாக அறிந்த ஓர் உண்மையும் இருக்கிறது. நாட்டில் இருக்கும் எல்லா முதியவர்களும் அரசியல்வாதிகள் அல்லர். - ஓய்வுக்காலம் என்பதே இல்லாமல் கடைசிக்காலம் வரை 'சம்பாதித்து’க்கொண்ட இருக்கும் 'அற்புதமான’ வாய்ப்பும் அவர்களுக்குக் கிடையாது. உடம்பில் சக்தி இருக்கும்போது நேர்மையாக உழைத்துச் சேர்த்தப் பணத்தின் மூலம் பாதுகாப்பான முறையில் வட்டி பெற்று வாழக்கூட அவர்களுக்கு உரிமையும் சலுகையும் கிடையாதா?

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism