Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

இது யாருக்கு பாதுகாப்பு..?

ஹலோ வாசகர்களே..!

இது யாருக்கு பாதுகாப்பு..?

Published:Updated:
##~##

ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ உணவு தானியம்; அரிசி கிலோ 3 ரூபாய்; கோதுமை கிலோ 2 ரூபாய்; பருப்பு கிலோ 1 ரூபாய்... உணவுப் பாதுகாப்புச் சட்டம் மூலம் இந்தியாவின் பெருவாரியான மக்களுக்கு இந்த நன்மை கிடைக்கும் என்பதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஆனால், நன்மைகளோடு சில தீங்குகளையும் சேர்த்தே இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் நமக்கு தந்துவிடுமோ என்றும் அச்சமாக இருக்கிறது. முதல் தீங்கு, திடீரென உயரப்போகும் அரசின் செலவு. இந்தச் சட்டத்துக்கு இதுவரை 90,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தை வரும் ஆண்டில் முழுமையாக நடைமுறைப்படுத்த 1.20 லட்சம் கோடி ரூபாய் வேண்டும். ஆக, துண்டுவிழும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது? அதிகமாகும் பற்றாக்குறையினால் வட்டி விகிதம் உயர்ந்து, பொருளாதாரம் மேலும் சரியத்தானே செய்யும்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டாவது தீங்கு, பெருவாரியான மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு அளிக்கவேண்டும் எனில், பல லட்சம் டன் உணவுப் பொருட்களை விவசாயிகளிட மிருந்து மத்திய அரசாங்கம் வாங்கவேண்டும். விவசாய விளைபொருட்களின் உற்பத்தி இதற்கேற்ப அதிகரிப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இத்தனை காலம் விவசாயிகளை ஆதரித்து உற்சாகப்படுத்தாத இவர்கள், இப்போது மட்டும் என்ன புதிதாகச் செய்துவிடப் போகிறார்கள்?

மூன்றாவது தீங்கு, விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்களை அரசாங்கம் வாங்கும் போது அவர்களுக்கு வழக்கமாகத் தரப்படும் குறைந்தபட்ச விலைதானே தரப்படும். இந்தத் திட்டத்துக்காக விவசாயிகளைக் கட்டாயப்படுத்தி, அவர்களுக்கு உடன்பாடு இல்லாத விலையில் கெடுபிடியாக கொள்முதல் செய்ய ஆரம்பித்தால், வெளிமார்க்கெட்டில் விற்று ஒருசில விவசாயிகள் அடைகிற கொஞ்சநஞ்ச லாபமும் போய்விடுமே?

ஹலோ வாசகர்களே..!

வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிக்கப்படும் சில கவர்ச்சித் திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு நன்மை கிடைத்தாலும், இன்னொரு சாரார் பாதிக்கப்படுவதும்; அதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் கெடுவதும் ஒரு சாபக்கேடாகவே ஆகிவிட்டது. இதில் ஒரு தொலைநோக்கு பார்வை இல்லை என்றால், எந்தப் புதிய திட்டமும் யாருக்கும் பாதுகாப்பு தந்துவிடாது!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism