Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:

 இது போதாது... இன்னும் வேண்டும்!

##~##

பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த ஏதாவது செய்தாகவேண்டும் என்கிற கட்டாயம் ஒருபக்கம்; ஆனால், என்ன செய்வது என்று தெரியாமல் ஏதோ ஒன்றைச் செய்யும் குழப்பச் சிந்தனை இன்னொருபக்கம் என எந்த உருப்படியான, புதிய யோசனையும் இல்லாமல் வெளியாகி இருக்கிறது 2013-14-க்கான வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறைந்துவரும் ஏற்றுமதி (கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்), அதிகரித்துவரும் இறக்குமதி (கிட்டத்தட்ட 491 பில்லியன் டாலர்) பிரச்னையால், வர்த்தகப் பற்றாக்குறை கொஞ்சம்கூட குறைக்க முடியாதபடிக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து சிலபல இயந்திரங்களை இறக்குமதி செய்ய வரிச் சலுகை, சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிதிச் சலுகை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குத் தேவையான நிலத்தின் அளவு பாதியாக குறைப்பு என ஏதோ சில அறிவிப்புகளை வெளியிட்டால், ஆக்ரோஷமான இப்பிரச்னைக்கு அழகான தீர்வு கண்டுவிட முடியும் என்று எதிர்பார்க்கிறது காங்கிரஸ் அரசாங்கம். அருதப் பழசான விஷயங்களை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் நம் தொழில் துறை வேகமெடுத்துவிடும் என்று கணக்குப் போடுகிறது.  

நம் தொழில் துறைக்கு இப்போது உடனடியாக தேவை உள்கட்டமைப்பு என்கிற ஆக்ஸிஜன்தான். இந்தியாவின் பல மாநிலங்களில் படுபயங்கரமாக இருக்கிறது மின் பற்றாக்குறை; எந்த நேரத்தில் எப்படி தடை வரும் என்று சொல்லமுடியாத சாலைப் போக்குவரத்து; புதிய தொழிற்சாலைகளை அமைக்கத் தேவையான நிலத்தை வாங்குவதற்குள் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கும் நிலை. இதை எல்லாம் தாண்டி வந்தால், அரசு அதிகாரிகள் போடும் நிபந்தனைகள்; அதனை சரிசெய்ய அரசியல்வாதிகளுக்குத் தரவேண்டிய லஞ்சம்... என தொழில் துறையினர் சந்திக்கும் பிரச்னைகள் ஒன்றிரண்டல்ல.

ஹலோ வாசகர்களே..!

பொருளாதார வளர்ச்சியின் கழுத்தை நெருக்கித் திணறவைக்கும் இதுபோன்ற ஆயிரம் தடங்கல்களை உள்ளே வைத்துக்கொண்டு, வெளிப்பூச்சுக்கு ஏதோ சில அலங்காரங்களைச் செய்வதால், நல்லபிள்ளை என்று பெயர் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறதா காங்கிரஸ் அரசாங்கம்? மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸின் மிச்சம் மீதி ஆட்சிக் காலமும் இந்த வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை லட்சணத்தில் தொடரப் போகிறது என்றால்... அவர்கள் தங்கள் உள்நாட்டு வாக்களிப்புக் கொள்கையை மொத்தமாக மாற்றிக்கொள்வார்கள்.

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism