Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

ஆர்.பி.ஐ.- பைக் குறை சொல்லாதீர்கள் !

ஹலோ வாசகர்களே..!

ஆர்.பி.ஐ.- பைக் குறை சொல்லாதீர்கள் !

Published:Updated:
##~##

அரை சதவிகிதம் வட்டியையாவது குறைப்பார் ஆர்.பி.ஐ தலைவர் சுப்பாராவ் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்ததில் பாதியை மட்டுமே (0.25%) குறைத்து, எல்லோரையும் ஏமாற்றிவிட்டாரே! என பொருளாதார நிபுணர்கள் பலரும் கோபத்தில் கொதிக்கிறார்கள். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், ஆர்.பி.ஐ. மீது எந்த வகையிலும் கோபப்படத் தேவையில்லை என்பது புரியும்.

வட்டி விகிதத்தை ஓரளவுக்கு மேல் குறைக்காததற்கு ஆர்.பி.ஐ. சொல்லும் காரணங்கள் அத்தனையும் ஆழ்ந்து யோசிக்கவேண்டியவை. ''வட்டி விகிதம் குறைந்துவிட்டால் பொருளாதாரம் மீண்டும் சீரடைந்துவிடும் என்று நினைப்பது தவறு. பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதே முக்கியம்'' என சுப்பாராவ் தெளிவாக எடுத்துச் சொல்லி இருப்பதை நிதி அமைச்சர் சிதம்பரம் முதல் மான்டேக்சிங் அலுவாலியா வரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இனியாவது காது கொடுத்து கேட்கவேண்டும். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது சிரத்தையோடு எடுக்கவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், 2ஜி-யில் தொடங்கி நிலக்கரி வரை பல்வேறு ஊழல்களில் மாட்டித் தவிக்கும் இந்த அரசாங்கம், ஒவ்வொரு நாளையும் நித்யகண்டமாக நகர்த்தி வரும்போது, நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை எப்படி தீட்டும் என்பது கேள்விக்குறிதான்.

ஹலோ வாசகர்களே..!

தவிர, ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது, அதே அளவு வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கவில்லை என சுப்பாராவ் குற்றம்சாட்டுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. கடந்த சில காலாண்டுகளில் வட்டி விகிதம், ரொக்கக் கையிருப்பு விகிதம், எஸ்.எல்.ஆர். ஆகியவற்றை 2.75% வரை ஆர்.பி.ஐ. குறைத்தபோது, வங்கிகள் வெறும் 0.39% அளவுக்கு மட்டுமே வட்டியைக் குறைத்தது. ஆக, ஆர்.பி.ஐ. தரும் சலுகைகளை வங்கிகள், தொழில் துறையினருக்கு கொண்டு சேர்த்தால்தான் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பிருக்கும்.

எந்த ஆட்சியாளர்களுக்கும் தலை வணங்காமல், நீதியைக் காக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் நம் உச்சநீதிமன்றம் செயல்படுவதுபோல, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டிக்காப்பதையே தனது இலட்சியமாகக்கொண்டு செயல்பட்டுவரும் ஆர்.பி.ஐ.யை நினைத்து நாம் பெருமைகொள்வோம்!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism