சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அவமானத்தை பிரதமர் பதவிக்கு ஏற்படுத்தி தந்துவிட்டார் மன்மோகன் சிங். நிலக்கரி ஊழல் பிரச்னையில் சி.பி.ஐ. தாக்கல் செய்யவிருந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பே படித்ததோடு, அதில் அரசு சிலபல மாற்றங்களையும் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இதற்கு முன்பிருந்த பிரதமர்களில் ஒருவர் மீதுகூட இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்ததில்லை.

நிலக்கரி ஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனில், சி.பி.ஐ. அறிக்கையைப் படிக்க இத்தனை ஆர்வம் காட்டியது ஏன்? இதை பிரதமருக்குத் தெரியாமலே பிரதமர் அலுவலக அதிகாரிகள் செய்தார்களா? இல்லை, பிரதமரே சொல்லித்தான் செய்தார்களா? சி.பி.ஐ. என்பது உண்மையைக் கண்டுபிடித்து மக்களுக்குச் சொல்லவேண்டிய கடமைகொண்ட அமைப்பு. அது தாக்கல் செய்யும் அறிக்கையைத் திருத்த பிரதமர் அலுவலகத்துக்கு அதிகாரம் தந்தது யார்? அதற்கு சட்ட அமைச்சர் துணை போனது எப்படி?

இப்படி அடுத்தடுத்து கிளம்பும் பல கேள்விகள், நம் ஆட்காட்டி விரலை மன்மோகனை நோக்கி நீட்ட வைக்கின்றன. தவிர, பிரதமர் அலுவலகம்தான் என்றில்லை, காங்கிரஸ் அமைச்சரவையே ஊழல்களின் மொத்த கூடாரமாக ஆகிவிட்டது. ரயில்வே போர்டு உறுப்பினர் பதவி நியமன ஊழலில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியிருப்பதற்காக ரயில்வே அமைச்சர் பன்சால் பதவி விலக்கப்பட்டுள்ளார். நிலக்கரி ஊழல் விசாரணையில் சி.பி.ஐ. விஷயத்தில் தலையீடு செய்ததற்காக சட்ட அமைச்சர் அஷ்வனிகுமாரும் ராஜினாமா செய்திருக்கிறார்.

நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கும் இந்தச் சமயத்தில், தொழில் வளர்ச்சியை துரிதப்படுத்த எந்த முயற்சியையும் மன்மோகன்சிங் அரசு எடுக்கவில்லை. மாறாக, நிலக்கரி ஊழல், ரயில்வே ஊழல், 2ஜி ஊழல் என்று பல ஊழல்களிலேயே மூழ்கி சிக்கித் திணறுகிறது.

காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற போக்கை கண்டித்து உச்சநீதிமன்றம் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது. இவ்வளவுக்கும் பிறகு கடைசி வரை பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தால், இன்று கர்நாடகாவில் பி.ஜே.பி.க்கு நடந்தது, நாளை டெல்லியில் காங்கிரஸுக்கும் நடக்கும்!

- ஆசிரியர்.