Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:

 உள்ளங்கையில் அழுகிய முட்டை!

##~##

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக புதிது புதிதாக பல பூதங்கள் கிளம்பி, 'கிரிக்கெட்’ என்ற வார்த்தைக்கே 'சூதாட்டம்’ என்ற அர்த்தத்தை அகராதியில் கொண்டுவந்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. ராஜஸ்தான் அணியில் சிறுபொறியாக ஆரம்பித்த இந்த மோசடி, இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது விழுந்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹலோ வாசகர்களே..!

டி.எஸ்.நாராயணசாமி என்கிற கண்ணியமிக்க நெல்லைக்காரரின் மகன்தான் இந்தியா சிமென்ட் நிறுவனத்தின் தலைவரான சீனிவாசன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் என்கிற அணியையும் நடத்தி வருகிறார். இவருடைய மருமகன்தான் குருநாத் மெய்யப்பன். இவரும் மிகவும் பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவர்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத் திற்கு எல்லாமுமாக இருந்தவர் இந்த குருநாத் மெய்யப்பன்தான். 'ஒரு கோடி ரூபாய்க்கு பெட்டிங் செய்தார்’ என்கிற குற்றச்சாட்டில் குருநாத் சிக்கி, மும்பை போலீசின் விசாரணை வளையத்துக்குள் மாட்டியிருக்கிறார்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணி வீரர்களை 'அழுகிய முட்டை’ என சில நாட்களுக்கு முன் வர்ணித்த சீனிவாசன், இன்றைக்கு தனது குடும்பத்திலேயே ஓர் அழுகிய முட்டை இருப்பதை என்ன சொல்லி நியாயப்படுத்தப் போகிறார்? 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அணியின் நிர்வாகத்தில் அவர் ஒரு கௌரவ உறுப்பினர், அவ்வளவுதான்!’ என அறிக்கைவிட்டால், பிரச்னையில் இருந்து தப்பிவிட முடியுமா? சூதாட்ட புக்கியான விண்டு தாராசிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனியின் மனைவியுடன் உட்கார்ந்து கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்ப்பதைப் பார்த்தால், அதிமுக்கியமான வீரர்கள்கூட இந்த சர்ச்சையில் சிக்குவார்களோ என்கிற சந்தேகமல்லவா நமக்குக் கிளம்புகிறது?

'கார்ப்பரேட் கவர்னன்ஸ்’ என்கிற தொழில் தர்மத்தை இன்றைக்கு எல்லா நிறுவனங்களும் வலியுறுத்துகின்றன. அதை பின்பற்றாத நிறுவனங்கள் பாதாளத்தில் விழுந்திருக்கின்றன என்பதற்கு சத்யம் போன்ற நிறுவனங்களே சாட்சி. இப்போது நடக்கிற விஷயங்களைப் பார்த்தால், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் 'கார்ப்பரேட் கவர்னன்ஸ்’ முறையாக பின்பற்றப்படுகிறதா என்கிற கேள்வி, அந்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எழுவது இயல்பே.  இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் சீனிவாசன்?

ஹலோ வாசகர்களே..!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism