Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:

 மொய்லி சொல்வது மெய்தானா?

##~##

''எக்கச்சக்கமான கச்சா எண்ணெய்யும் இயற்கை எரிவாயுவும் நம் நாட்டில் இருக்கிறது. ஆனால், அதை வெளியில் எடுப்பதற்கு எந்த முயற்சியையும் செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள் சிலர்! வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைக்க நினைத்தால், என்னையே மிரட்டுகிறார்கள்'' என்று பொருமித் தள்ளி இருக்கிறார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கும் இந்தச் சமயத்தில்,

ஹலோ வாசகர்களே..!

வீரப்ப மொய்லி இப்படி பேசி இருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது.  வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் வாங்குவதால் டாலர் கையிருப்பு குறைந்து ரூபாய் மதிப்பு சரிகிறது என்று புலம்பும் சில மத்திய அமைச்சர்கள், வீரப்ப மொய்லியின் அதிர வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

நம் நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களை வெளியே கொண்டுவருவதன் மூலம் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்த முடியும் என்கிறபோது, அரசாங்கம் ஏன் அதை செய்ய மறுக்கிறது? ரூபாயின் மதிப்பை உயர்த்த அந்நிய நேரடி முதலீட்டை எல்லாத் துறைகளிலும் அனுமதிக்கவேண்டும்; அதற்கான வரம்பை இன்னும் உயர்த்தவேண்டும் என்கிற ரீதியில் மத்திய அரசாங்கம் யோசிப்பதற்கு பதிலாக, காலடியில் கிடக்கும் கச்சா எண்ணெய்யை வெளியே எடுக்கும் நடவடிக்கை எடுக்கலாமே!

நாட்டையே சூறையாட நினைக்கும் சதித் திட்டத்தை பெட்ரோலியத் துறை அமைச்சரே போகிறபோக்கில் சொல்லியிருப்பது, ஏராளமான சந்தேகங்களை எழுப்புகிறதே! நாட்டின் மீதுகொண்ட அக்கறை காரணமாக பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி பகீர் உண்மையை வீரப்ப மொய்லி வெளிப்படுத்தினாரா... அல்லது குறிப்பிட்ட யாரோ சில எதிரிகளுக்கு தலைவலி உண்டாக்கும், அரசியல் ரீதியாக காங்கிரஸின் சரிவுகளை திசை திருப்பவும் நடத்தப்படும் கபட நாடகமா இது?

ஹலோ வாசகர்களே..!

நாட்டின் பொருளாதார வண்டியை மேற்கொண்டு எப்படி நகர்த்திச் செல்வது என்கிற கேள்விக்கு விடை சொல்லக்கூடிய மிக முக்கியமான கேள்வி இது!

- ஆசிரியர்.