Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:

 நம்பிக்கையைப் பலி தராதீர்கள்!

##~##
ஹலோ வாசகர்களே..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2001-ல் கொல்கத்தா பங்குச் சந்தையில் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின், தற்போது இந்தியா முழுக்க உள்ள முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (சுருக்கமாக என்.எஸ்.இ.எல்.) தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், இனி எதை நம்பி முதலீடு செய்வது என்கிற முக்கியமான கேள்வியை நம் அனைவரிடமும் எழுப்பி இருக்கிறது.

நடைமுறையில் இருக்கும் சந்தை குறித்த சட்டங்களின் நிழல்கூட படாத, ஸ்பாட் வியாபாரம் செய்யும் எக்ஸ்சேஞ்ச் என்று பெயர் வைத்துக்கொண்டு முதலீட்டாளர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறதோ என்று சந்தேகப்பட்டுதான் என்.எஸ்.இ.எல். மீது மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் வர்த்தகத்தைத் தற்காலிமாக நிறுத்தி, வர்த்தகர்களுக்கு செட்டில்மென்ட் செய்யவேண்டிய தேதியை ஒத்திவைத்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

என்.எஸ்.இ.எல். நிறுவனம் நுகர்வோர் விவகாரத் துறையின் வரம்பின் கீழ் வந்தபோதும், இதுபோன்ற ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச்களுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தை அரசாங்கம் ஏற்படுத்த தவறியதே தற்போதைய சிக்கலுக்குக் காரணம். ஆனால், பார்வேர்டு மார்க்கெட் கமிஷனுக்கு ஊக வணிகம் பற்றி நன்கு தெரிந்தாலும், என்.எஸ்.இ.எல். அமைப்பைக் கண்காணித்து கட்டுப்படுத்துகிற அதிகாரம் இல்லை. ஆக, கண்காணிப்பவர் யார் என்று தெரியாமல் போனால், பசிக்காதவன்கூட நான்கு பழத்தை எடுத்து பைக்குள் போட்டுக்கொள்ளத்தானே செய்வான்? இதை உணராமல் இத்தனை காலம் இருந்தது மத்திய அரசுக்கு முதலீட்டாளர்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது.

ஹலோ வாசகர்களே..!

இதுபோன்ற சர்ச்சைகள் இன்று வரும், நாளை போகும் என்று விட்டுவிட முடியாது. காரணம், முதலீட்டாளர்களின் அடிப்படை நம்பிக்கையை இந்த சர்ச்சைகள் பலி தந்துவிடுகின்றன. பொருளாதார சரிவு, ரூபாயின் மதிப்பு இழப்பு என எத்தனையோ பிரச்னைகளால் முதலீட்டு உலகம் திக்குமுக்காடிக்கொண்டிருக்க, இதுபோன்ற நிகழ்வுகளால் எல்லாவகையான முதலீடுகள் மீதும் முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் உருவாகும். இந்த சந்தேகம் வந்துவிட்டால், படிப்படியாக முதலீடு என்பதை மறந்து, மக்கள் தங்க நகைகளிலும், மனைகளிலுமே அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலை உருவாகும். நாட்டின் வளமான எதிர்காலத்திற்கே உலைவைக்கும் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மத்திய அரசாங்கம் இனியாவது உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- ஆசிரியர்.