மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சொன்ன தகவல் உண்மையிலேயே நம்மை அதிர்ச்சிகொள்ளச் செய்கிறது. கிட்டத்தட்ட ரூ.44,000 கோடி மதிப்புள்ள தானியங்களும், காய்கறிகளும் பழங்களும் ஆண்டுதோறும் வீணடிக்கப்படுவதாகச் சொல்லி இருக்கிறார் அவர்.

இதில் காய்கறிகளும் பழங்களும் மட்டுமே சுமார் 13,309 கோடி ரூபாய் அளவுக்கு வீணாவதாகவும், இதனோடு அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 44,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உணவுப் பொருட்கள் மக்கள் பயன்படுத்த

முடியாமல் வீணடிக்கப்படுவதாகவும் சொல்லி இருக்கிறார் மத்திய அமைச்சர்.

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் முடிந்தபின்பும் கால் வயிறு, அரை வயிறோடு தூங்கச் செல்கிற மக்கள் பல கோடி பேர் இருக்க, இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்களை வீணடிப்பது எந்த வகையில் நியாயம்?

உணவுப் பொருட்கள் வீணாகாமல் பாதுகாப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதி நம்மிடம் 50% அளவுக்குக்கூட இல்லை என்பதை அமைச்சரே நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லிவிட்டால் மட்டும் போதுமா, உணவுப் பொருட்கள் அநியாயமாக வீணாவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டாமா?

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் தானியங்களை வழங்க 90 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழிக்கத் தயாராக இருக்கும் இந்த அரசாங்கம், உணவுப் பொருட்களை பாதுகாக்க மட்டும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருக்கிறது?

உணவு தானியங்கள் வீணாவதைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சேமிப்புக் கிடங்குகளும் காய்கறிகள், பழங்கள் வீணாமல் தடுக்க குளிர்சாதனக் கிடங்குகளும் சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும். இந்த வசதியை சாதாரண வர்த்தகர்கூட எளிதில் பயன்படுத்துகிற மாதிரி இருக்க வேண்டும். இதற்கு தேவையான உள்கட்டமைப்புகள் மற்ற நாடுகளில் எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதன்படி நம் நாட்டிலும் செய்யலாமே!

எலிகளும் பெருச்சாளிகளும் புளுபூச்சிகளும் நம் உணவுப் பொருட்களை நாசம் செய்வதை இனியாவது தடுக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

-ஆசிரியர்.