அன்புச் சுட்டிகளுக்கு...  பூ.கொ.சரவணன் பேசுகிறேன்.

கற்றுக்கொள்வதற்கும் சாதனை புரிவதற்கும் வயதோ, சூழ்நிலையோ தடைக்கற்கள் இல்லை.  மன உறுதி இருந்தால், எந்த வயதிலும் எந்தச் சூழ்நிலையிலும் சாதனை படைக்கலாம். இதற்கு, உதாரணங்களாக பலர் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். 'ஒரு தேதி... ஒரு சேதி’ மூலம் அவர்களை அறிந்துகொள்வோம். இதோ, செவி விருந்து தொடர்கிறது.

ஒரு தேதி...ஒரு சேதி...

« 'மாட்டுக் கொட்டகையில் ஒரு வருஷம், கோயில் திண்ணையில் மறு வருஷம், கோணிப்பையே குடையாக, செருப்பே இல்லா நடைப் பயணம்’ எனக் கவிதை படைத்தவர் யார் தெரியுமா? அரசுப் பள்ளியில் படித்து, சவால்கள் பல சந்தித்து, இந்தியா சார்பாக, நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பியவர். சந்திரயான் வெற்றியை உலகமே வியக்கப் பார்க்கவைத்த மயில்சாமி அண்ணாதுரை. அவரது வெற்றிக் கதையை அறியலாமா?

« கதை கேட்பது எல்லாருக்கும் பிடித்த விஷயம். எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும், பார்த்தாலும் சலிப்பே தராத அந்தக் கதை, 150-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. எந்த கதை அது? கைக்கடிகாரம் அணிந்த முயல், சீட்டுக்கட்டு சிப்பாய்கள், கிடுகிடு பள்ளங்கள்... இப்போது ஞாபகம் வந்துடுச்சா? ஆலிஸின் அற்புத உலகமே அது. அதைப் பற்றி சுவாரஸ்யமான செய்திகளைக் கேட்க ஆவலா?

«அறிவியல் கண்டுபிடிப்பில் தன் உயிரையே அர்ப்பணித்து, மருத்துவத் துறையில் உயிர் காக்கும் கதிர்வீச்சுப் பயன்பாட்டுக்கு உதவிய, மேரி க்யூரி நினைவைப் போற்றுவோமா?

இன்னும் பல தகவல்களுடன் காத்திருக்கிறேன்!  

ஒரு தேதி...ஒரு சேதி...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு