Published:Updated:

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

Published:Updated:

அன்புச் சுட்டிகளுக்கு...  பூ.கொ.சரவணன் பேசுகிறேன்.

சவால்கள், போராட்டங்கள், பிரச்னைகள் போன்றவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் சாதனையாளராகவோ, சராசரி மனிதராகவோ மாறுகிறோம். பிரச்னைகளைப் பூப்பந்துகளாக நினைத்து விளையாடுபவர்கள், வெற்றியாளர்களாக உலகம் உள்ளவரை நினைவில் இருக்கிறார்கள். 'ஒரு தேதி... ஒரு சேதி’ மூலம் அத்தகைய சாதனையாளர்களை அறிந்துகொண்டு ஊக்கம் பெறலாம். இதோ, செவி விருந்து தொடர்கிறது.

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புரூஸ் லீ என்றதும் அவரது அதிரடி சண்டைக் காட்சிகள் நினைவுக்கு வரும். ஆனால், அவர் மென்மையான கவிதைகள் படைக்கும் கவிஞராகவும் இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? தன்னிடம் வம்புக்கு வருபவர்களிடமும் ஜென் கதைகளைச் சொல்லி அன்புக்கு சிபாரிசு செய்தவர் என்பது தெரியுமா? புரூஸ் லீ பற்றி இன்னும் சில ஆச்சர்யங்களைச் சொல்லப்போகிறேன்.

ஒரு தேதி...ஒரு சேதி...

ஆங்கிலத்தில் நாங்கள்தான் அற்புத ஞானம் உடையவர்கள் என்று நினைத்த இங்கிலாந்துக்காரர்களை நையாண்டி செய்து, இங்கிலாந்திலேயே நாடகம் ஒன்றை அரங்கேற்றினார் ஒருவர். நாடு பிடிக்கும் இங்கிலாந்தின் போர் வெறியையும் தைரியமாக விமர்சித்து, கடும் பிரச்னைகளைச் சந்தித்தவர். இப்போது, அவரை உலகமே கொண்டாடுகிறது. பெர்னாட் ஷா என்ற அந்தச் சாதனையாளரின் பல சவால்களை அறிந்துகொள்ள வேண்டுமா?

இன்னும் பல தகவல்களுடன் காத்திருக்கிறேன்!