ஒரு தேதி...ஒரு சேதி...
அன்புச் சுட்டிகளுக்கு...
பூ.கொ.சரவணன் பேசுகிறேன்.
சுதந்திர தினம், குடியரசு தினம், தேசத் தலைவர்கள் தினம், சாதனையாளர்கள் தினம் என வருவதை, சில நிமிடங்கள் நினைவுகூர்ந்துவிட்டு, வேறு வேலைகளைப் பார்ப்பதற்காக அல்ல. அந்த நாட்களில், இந்தச் சமூகத்துக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என யோசித்து, அதற்கான ஆக்கபூர்வமான செயலில் இறங்க வேண்டும். 'ஒரு தேதி... ஒரு சேதி’ அதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இதோ, செவி விருந்து தொடர்கிறது.

கேறுப்பர் இனத்தில் பிறந்ததால், பள்ளியில் படிக்கும்போது, படிப்பிலும் விளையாட்டிலும் சக மாணவர்களால் ஒதுக்கப்பட்டவர் பராக் ஒபாமா. இன்று மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். எனில், எத்தனை கிண்டல்கள், உதாசீனங்கள், தடைகளைத் தாண்டி வந்திருக்க வேண்டும்? அதைக் கொஞ்சம் கேட்கத் தயாரா?

டென்னிஸ் உலகின் மாயப் பெயர், ரோஜர் ஃபெடரர். 7 விம்பிள்டன், 5 அமெரிக்க ஓப்பன், 4 ஆஸ்திரேலிய ஓப்பன் உட்பட, 17 கிராண்ட்ஸ்லாம் வென்றிருக்கும் ஃபெடரரின், வெற்றிகள் மட்டுமே பலரின் நினைவில் இருக்கும். அவர் சந்தித்த தோல்விகள், அதிலிருந்து மீள்வதற்கு அவர் கையாண்ட யுக்திகள் பற்றி அறிந்துகொள்வோமா? கூடவே, அவரது சிறுவயதுக் குறும்புகளையும் தெரிந்துகொள்வோமே!
இன்னும் பல தகவல்களுடன் காத்திருக்கிறேன்!