Published:Updated:

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

Published:Updated:

அன்புச் சுட்டிகளுக்கு...

பூ.கொ.சரவணன் பேசுகிறேன்.

தினமும் காலையில் எழுந்ததும் நாட்காட்டியில் தேதியைக் கிழிக்கும்போது, ஈடு இணையற்ற 24 மணி நேரம், நம்மைக் கடந்திருப்பதை உணர வேண்டும். அந்த 24 மணி நேரத்தில், நமக்கும் இந்த சமூகத்துக்கும் உபயோகமாக எத்தனை நிமிடங்களைச் செலவழித்தோம் என்று யோசிக்க வேண்டும். அப்படி சிந்தித்து செயல்பட்டவர்கள்தான், சாதனையாளர்களாக அதே நாட்காட்டியில் தங்கள் பெயர்களைப் பதித்திருக்கிறார்கள். 'ஒரு தேதி... ஒரு சேதி’ உங்களுக்கு சொல்லவருவதும் அதுதான். இதோ, செவி விருந்து தொடர்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு தேதி...ஒரு சேதி...

லியோ டால்ஸ்டாய் என்ற மனிதரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தவறு செய்வது மனிதனின் இயல்பு. அந்தத் தவற்றைத் திருத்திக்கொண்டு, தன்னையும் உயர்த்தி, உலகையும் உயர்த்தும்போது உன்னத மனிதராக மாறலாம். டால்ஸ்டாய் வாழ்விலும் தவறுகள் இருந்தன. வேட்டைப் பிரியராக இருந்தவரை, அன்பைச் சொல்லும் அற்புத மனிதராக, படைப்பாளியாக மாற்றிய சம்பவம் எது?

காஸா... இந்தப் பெயரை செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்பீர்கள். போரினால் பாதிக்கப்பட்டு, மக்கள் தினம் தினம் வலிகளோடு வலம்வரும் பாலஸ்தீன நாட்டின் ஒரு பகுதி. அந்த மக்களுக்காகப் போராடிய அற்புதத் தலைவர், யாசர் அராபத். அவரது பிறந்த நாள், ஆகஸ்ட் 23. அந்த நாளில், அவரைப் பற்றி சொல்லப்போகிறேன். கேட்கத் தயாரா?

இன்னும் பல தகவல்களுடன் காத்திருக்கிறேன்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism