Published:Updated:

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

அன்புச் சுட்டிகளுக்கு...

பூ.கொ.சரவணன் பேசுகிறேன்.

ஒவ்வொரு நாளும் உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. மாறும் உலகத்துக்கு ஏற்ப, நம்மையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு முக்கியத் தகுதி, நாம் எப்போதும் ஒரு மாணவரின் மனநிலையோடு இருப்பதுதான். கற்றது போதும் என்று நிறுத்திக்கொண்டால், காலம் நம்மைக் கடந்து வெகுதூரம் சென்றுவிடும். ஆகவே, எந்த வயதிலும் உலகின் மாணவராக இருப்போம். 'ஒரு தேதி... ஒரு சேதி’ சொல்லவருவதும் அதுதான். இதோ, செவி விருந்து தொடர்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒரு தேதி...ஒரு சேதி...

குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரின் இன்றியமையாத உணவுப் பொருளாக இருப்பது, பால். அந்தப் பால் என்ற சொல்லை உச்சரித்ததும், இந்தியர்களாகிய நமக்கு நினைவுக்கு வர வேண்டிய பெயர், வர்கீஸ் குரியன். வெண்மைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் இவர், செய்த சாதனை என்ன? பெரிய தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவரை, வெண்மைப் புரட்சியின் பக்கம் அழைத்துவந்த சம்பவம் எது?

சிலரைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் அவருக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை தீராது. சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக சமூகத்தில் தடம் பதித்து, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றி இந்த ஆசிரியர் தினத்திலும் கேட்க நீங்கள் தயார்தானே?

ஒரு தேதி...ஒரு சேதி...

சார்லியும் சாக்லேட் ஃபேக்டரியும், மெட்டில்டா’ உட்பட அற்புதமான சிறுவர் நாவல்களை அளித்தவர் ரோல் தால். அவரது வாழ்வின் சோதனைகளையும் சாதனைகளையும் கேட்போமா?

இன்னும் பல தகவல்களுடன் காத்திருக்கிறேன்!