Published:Updated:

ஒரு தேதி...ஒரு சேதி...

ஒரு தேதி...ஒரு சேதி...

பிரீமியம் ஸ்டோரி

அன்புச் சுட்டிகளுக்கு...

பூ.கொ.சரவணன் பேசுகிறேன்.

நம்மைச் சுற்றி இருக்கும் உலகின் ஆச்சர்யங்களை அறிவதற்கான அறிவுத் தேடல், வாழ்க்கைக்கான பணத் தேடல், சக மனிதர்களிடம் அன்பைத் தேடல் என, எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறோம். இந்தத் தேடல் இருக்கும் வரை உலகம் ஒவ்வொரு நாளும் புதிதாகத் தோன்றும். புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கலாம். எனவே, தேடலை நிறுத்தாதீர்கள். இதோ, உங்கள் தேடலுக்கான சிறு வழிகாட்டலாக ‘ஒரு தேதி... ஒரு சேதி’ செவி விருந்து தொடர்கிறது.

¬காந்தி என்ற மாமனிதரைப் பற்றி படிப்பவர்கள், ‘ஒரு மனிதரால் இப்படியும் இருக்க முடியுமா?’ என்று வியந்துகொண்டிருக்கிறோம். இன்னும் 100 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வியப்பு இருக்கும். இந்த அக்டோபர் 2-ம் தேதியும்  அவரைப் பற்றி கேட்டு வியக்க, விஷயங்களோடு காத்திருக்கிறேன். கேட்கத் தயாரா?

ஒரு தேதி...ஒரு சேதி...

¬அக்பர் என்ற அற்புத மன்னரைப் பற்றி  வரலாற்றுப் புத்தகத்தி்ல் வாசித்திருப்பீர்கள். அவரது வீரத்துக்குச் சான்றாக பானிபட் போர், சமூக சிந்தனைக்குச் சான்றாக மரங்களை நட்டது ஆகியவற்றை அறிந்திருப்பீர்கள். அக்பரைப் பற்றி இதைத் தாண்டியும் பல சுவையான விஷயங்கள் உள்ளன. அவற்றை அறிந்துகொள்ள ஆவலா?

¬சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகச் சுடர்களில், மனதில் நிறுத்தவேண்டிய ஒருவர், ஜெயப்பிரகாஷ் நாராயணன். சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர். சுதந்திரத்துக்குப் பிறகும் மக்களின் நல்வாழ்வுக்காக, இந்திய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடினார். அது பற்றி அறிந்துகொள்ளத் தயாரா?

மேலும் பல சுவையான செய்திகளுடன் காத்திருக்கிறேன்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு