Published:Updated:

`நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்!’ - சாதிக்கத் துடிப்போருக்கு வழிகாட்டிய நிகழ்ச்சி!

“இரண்டு ஆண்டுகள் ஒதுக்கி 100 சதவிகித உழைப்பைக் கொடுத்தால் தான் குடிமைப் பணியாளராக மாற முடியும்!”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆனந்த விகடன் மற்றும் சாதிக் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்! - சாதிக்கத் துடிப்போருக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி!’ எனும் ஆன்லைன் இலவசக் கருத்தரங்கு கடந்த ஜூன் 13 (ஞாயிறு), காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. மாணவர்களின் அமோக வரவேற்போடு நடந்து முடிந்தது நிகழ்வு. இந்த இணையவழி நிகழ்வில் சுமார் 700 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் குடிமைப் பணி தேர்வுகளுக்குத் தயாராவது எப்படி என்பது குறித்த வரைபடத்தை, சாதிக் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் எம்.ஏ.சாதிக் பேசினார்.

அடுத்து பேசிய தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல மூத்த மண்டல பாதுகாப்பு ஆணையரான (RPF) கே. செந்தில் IRPFS, தேர்வுக்குத் தயாரானது குறித்து பேசினார்; பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொண்ட அவர், குடிமைப் பணியில் கிடைக்கும் பணி சார்ந்த மனநிறைவைத் தாம் பெற்றிருப்பதாகக் கூறினார்.

வழிகாட்டல் நிகழ்ச்சி
வழிகாட்டல் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாமபுரம் சார் ஆட்சியர் எம். சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ் பேசும்போது, “+2 முடித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். ‘கேட்’ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி-யில் நுழைந்தேன்; அதன் பிறகு இந்தியப் பொறியியல் தேர்வுக்குத் தயாரானபோது, குடிமைப் பணித் தேர்வுகளுக்கும் தயாரானேன். முதலில் 900 ரேங்க் வந்தது, இருந்தாலும் பணியில் சேர்ந்துவிட்டேன். ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்த முயற்சிகளில் 100 இடங்களில் வந்து தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தேன். முதன்மைத் தேர்விலிருந்து நேர்காணலுக்குச் சென்றுவிட்டாலும், நேர்காணல் முடிந்த பிறகு மீண்டும் பிரிலிம்ஸ் தேர்வுக்குத் தயாராக வேண்டும். இரண்டு ஆண்டுகள் ஒதுக்கி 100 சதவிகித உழைப்பைக் கொடுத்தால் தான் குடிமைப் பணியாளராக மாற முடியும்” என்றார்.

மாணவர்கள் எதிர்கால கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் ஒரு மேடையை சாதிக் ஐ.ஏ.எஸ் அகாடமி உடன் இணைந்து உருவாக்கிக் கொடுத்திருப்பதில் மகிழ்கிறது விகடன்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு