Published:Updated:

`வெல்ல முடியாத தேர்வல்ல ஐ.ஏ.எஸ்!' ஆனந்த விகடன் - சாதிக் ஐ.ஏ.எஸ் அகாடமி ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சி!

ஐ.ஏ.எஸ்

ஆனந்த விகடனும் சாதிக் ஐ.ஏ.எஸ் அகாடமியும் இணைந்து நடத்துகிற, ‘நீங்களும் ஐ,ஏ,எஸ் ஆகலாம்’ ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சி உங்களுக்கானதுதான்.

’இந்திய ஆட்சிப் பணி’ - அரசு வேலையில் சேர வேண்டுமென நினைக்கிற பலருக்கும் அதில் உயரிய அதிகாரம் மிக்க பதவியான இதன் மீது நிச்சயம் கனவு இருக்கும்.

மருத்துவம், பொறியியல் போன்று படிப்பதற்கு லட்சக் கணக்கில் செலவழித்து வரக் கூடிய ஒரு பதவி அல்ல இது. இந்தப் பதவிக்கான தேர்வை எழுத ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். அதிலும் முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்க வேண்டுமென்பன போன்ற எந்தவொரு நிபந்தனையும் கிடையாது.

தன்னம்பிக்கை மட்டும் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் போதும், யாரும் எட்டிப் பிடிக்கலாம் இந்த இலக்கை.

’அட, பார்க்கலாமே’ எனத் தோணுகிற, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆவலுடன் இருக்கிற மாணவரா நீங்கள்? நீங்களேதான் எங்கள் இலக்கு.

சிவில் சர்வீஸ்
சிவில் சர்வீஸ்
ஆனந்த விகடனும் சாதிக் ஐ.ஏ.எஸ் அகாடமியும் இணைந்து நடத்துகிற, ‘நீங்களும் ஐ,ஏ,எஸ் ஆகலாம்’ ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சி உங்களுக்கானதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கட்டணமில்லாக் கருத்தரங்கு வரும் ஜனவரி 23ம் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடக்கிறது.

கருத்தரங்கில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியர் தர்மலாஸ்ரீ, கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் தங்களது சிவில் சர்வீஸ் அனுபவங்களைப் பகிர்ந்து ‘வெல்ல முடியாத தேர்வல்ல ஐ.ஏ.எஸ்’ என பேச இருக்கின்றனர்.

இவர்கள் தவிர, சாதிக் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் சாதிக்கும் மாணவர்களுடன் உரையாட இருக்கிறார்.

அனுமதி இலவசம். அதேநேரம் முன்பதிவு அவசியம்.

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism