வந்தாச்சு! வந்தாச்சு!
சத்யா மற்றும் அவள் விகடன் இணைந்து நடத்தும் `அவள் ஜாலி டே' - வாசகிகளின் திருவிழா. பெண்களுக்கான தனித்திறமைகளையும் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு மேடை. போட்டிகள், பரிசுகள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எனப் பெண்களுக்கே பெண்களுக்கு என இரண்டு நாள்கள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மதுரை மற்றும் சென்னையைத் தொடர்ந்து திருநெல்வேலியில் அவள் ஜாலி டே ஆகஸ்ட் 6 மற்றும் 7 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
போட்டி விவரங்கள்
Category 1
பாட்டு, நடனம், நடிப்பு, பட்டிமன்றம், ரேடியோ ஜாக்கி/ வீடியோ ஜாக்கி.
Category 2
ரங்கோலி, மெகந்தி, கவிதைப்போட்டி, அடுப்பில்லா சமையல், Script writing/News reporting, Arts&Crafts, Selfie, one minute video
ஒருவர் ஒவ்வொரு கேட்டகிரியிலும் இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும். இதுமட்டுமல்லாமல் பங்கேற்பவர்களின் திறமைக்கு சவால்விடும் `ஆன் தி ஸ்பாட்' போட்டிகளும் நடைபெறும்.
நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு 2,00,000 மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் காத்திருக்கின்றன. கூடுதலாக, ஜாலி டேவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நிச்சயப் பரிசு உண்டு. ஜாலி டே நிகழ்வன்று மதிய உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ் என அனைத்தும் நிகழ்விடத்திலேயே வழங்கப்படும்.
அனைத்துக்கும் மேலாக ஜாலி டேவை கலகலப்பாக்க இணைகிறார்கள் பிரபல தொகுப்பாளர்கள் `குக் வித் கோமாளி' பாலா மற்றும் திபிகாஷி. கவலைகளை மறந்து களமிறங்க அனைத்துப் பெண்களும் தவறாமல் நிகழ்ச்சிக்கு ஆஜராகிடுங்க.

நிகழ்ச்சியில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி இலவசம். ஆண்களுக்கு நிச்சயம் அனுமதியில்லை.
நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.