Election bannerElection banner
Published:Updated:

International Dance Day: டான்ஸ் வித் மாஸ்டர்ஸ்... சொல்லித்தர நாங்க ரெடி... கத்துக்க நீங்க ரெடியா?

Dance With Masters
Dance With Masters

’ஆனந்த விகடன்’ வழங்கும் ’டான்ஸ் வித் மாஸ்டர்ஸ்’ வெபினாரில் நடன இயக்குநர்கள் நந்தா மற்றும் சாண்டி மாஸ்டர் இருவருடனுடம் நீங்களும் ஆடலாம்.

பத்திரிகை, டிவி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர்… எங்கு திரும்பினாலும் ’கொரோனா பிரேக்கிங்’ செய்திகள் நம் தைரியத்தை கொல்கின்றன. "ஆஸ்பத்திரி இல்லை... அப்படியே கிடைத்தாலும் செல்ல ஆம்புலன்ஸ் இல்லை, எப்படியோ போய்விட்டாலும் அங்கு பெட் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை" என்கிற குரல்கள்தான் திரும்பிய பக்கமெல்லாம்.

இதுவும் கடந்து போகும்தான். ஆனால் கடக்கின்ற நிமிடங்களின் ரணங்களிலிருந்து தப்பிப்பது எப்படி? இசை, நடனம் என்பன போன்ற மனதை லேசாக்கும் ஏதோவொன்றுதான் கண்ணுக்குத் தென்படும் ஒரு தற்காலிகத் தீர்வு.

Dance With Masters
Dance With Masters
`ஆனந்த விகடன்’ வழங்கும் `டான்ஸ் வித் மாஸ்டர்ஸ்’!
அப்படியொரு தீர்வுக்குக் களம் அமைத்துத் தருகிறது ஆனந்த விகடன். ஏப்ரல் 29, சர்வதேச நடன தினத்தையொட்டி ’ஆனந்த விகடன்’ வழங்கும் ’டான்ஸ் வித் மாஸ்டர்ஸ்’ வெபினாரில் நடன இயக்குநர்கள் நந்தா மற்றும் சாண்டி மாஸ்டர் இருவருடனுடம் நீங்களும் ஆடலாம்.
நாள் மே 1 சனிக்கிழமை நேரம் மாலை 3.30 – 4.30

நந்தா, சாண்டி இருவரும் சினிமா, நடனம் என்பதைத் தாண்டித் தாங்கள் கடந்து வந்த பாதை, சந்தித்த மனிதர்கள் என நிறையவே பேச இருக்கிறார்கள்.

ஆடுவது, பாடுவதற்கு வயது வித்தியாசம் ஏது? எனவே குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள் கொஞ்ச நேரமேனும் கொரோனா பயம் தொலைந்து போகட்டும்.

முற்றிலும் இலவசமாக நடக்கவிருக்கும் இந்த நிகழ்வுக்கு முன்பதிவு அவசியம். உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்யுங்கள் மக்களே!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு